பில்லா ஒரு தோல்வி படம்.. ரொம்பவே யோசித்தேன்.. விஷ்ணுவர்தன் என்ன இப்படி பேசிட்டாரு?

சென்னை: முரளியின் இரண்டாவது மகன் ஆகாஷையும், அதிதி ஷங்கரையும் வைத்து விஷ்ணுவர்தன் நேசிப்பாயா என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தை விஜய்யின் உறவினரான பிரிட்டோவின் மகள் தயாரித்திருக்கிறார். இவர் ஆகாஷை திருமணம் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமானது நாளை திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்தச் சூழலில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விஷ்ணுவர்தன் பேசியிருக்கும் விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

குறும்பு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விஷ்ணுவர்தன். அந்தப் படத்தில் அல்லரி நரேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். அந்தப் படம் போதிய வரவேற்பை பெறவில்லை. இருந்தாலும் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் சூப்பர் ஹிட்டடித்தன. முக்கியமாக அந்தப் படத்திலிருந்துதான் முதன்முறையாக தமிழ் சினிமாவில் ரீமிக்ஸ் பாடல் என்ற கலாச்சாரம் வந்தது குறிப்பிடத்தக்கது. யுவன் ஷங்கர் ராஜா அந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

billa ajithkumar vishnuvardhan

கவனம் ஈர்த்த விஷ்ணுவர்தன்: முதல் படம் தோல்விக்கு பிறகு விஷ்ணுவர்தன் அடுத்ததாக அறிந்தும் அறியாமலும், பட்டியல் உள்ளிட்ட படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களும் வியாபார ரீதியாக பெரும் வெற்றியை பெறாவிட்டாலும் விமர்சன ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸை பெற்றன. அதிலும் பட்டியல் படத்தில் இடம்பெற்ற காட்சிகளை பார்த்த ரசிகர்கள் விஷ்ணுவர்தன் மேக்கிங்கில் பட்டையை கிளப்பிவிட்டாரே என்று ஓபனாக பாராட்டவும் தவறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

பில்லா விஷ்ணுவர்தன்: இப்படிப்பட்ட சூழலில்தான் கடந்த 2007ஆம் ஆண்டு அஜித்தை வைத்து பில்லா படத்தை இயக்கினார் விஷ்ணு. அந்தப் படம் ஏற்கனவே ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டிருந்தது. தமிழில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். ஏற்கனவே ரீமேக் செய்யப்பட்ட படத்தை மீண்டும் விஷ்ணுவர்தன் இயக்கும்போது அவர் முன் ஏகப்பட்ட சவால்கள் இருந்தன. அதாவது ரீமேக் செய்யப்பட்ட ஒரு படத்தை மீண்டும் ரீமேக் செய்கிறாரே; அப்படி என்ன இதில் வித்தியாசத்தை காட்டிவிடப்போகிறார் என்ற கேள்விகளும் முன்வைக்கப்பட்டன.

மெகா ஹிட்: ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதிலும் படத்தை ரொம்பவே ஸ்டைலிஷாக இயக்கியிருந்தார். அஜித்தின் காஸ்ட்யூமும், ஸ்டைலும், விஷ்ணுவின் ஸ்டைலிங்கான மேக்கிங்கும் ரொம்பவே ஃப்ரெஷ்ஷாக இருந்தது. முக்கியமாக அஜித்துக்கு நீண்ட காலம் கழித்து ஒரு மெகா ஹிட் இந்தப் படத்தின் மூலம்தான் கிடைத்தது. பில்லா வெற்றிக்கு பிறகு விஷ்ணுவர்தன் கவனிக்கப்படக்கூடிய இயக்குநராக மாறிவிட்டார். தொடர்ந்து தமிழ், ஹிந்தி மொழிகளில் படங்களையும் இயக்கினார்.

விஷ்ணுவர்தனின் பேட்டி: சூழல் இப்படி இருக்க தமிழில் அவர் நீண்ட வருடங்களுக்கு நேசிப்பாயா படத்தை இயக்கியிருக்கிறார். நாளை இந்தப் படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் அந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஷ்ணுவர்தன், “ரஜினிகாந்த் நடித்திருந்த பில்லா படம் தமிழில் சரியாக போகவில்லை. சரியாக போகாத படத்தையா நாம் ரீமேக் செய்யப்போகிறோம் என்று அஜித்தை வைத்து பில்லா செய்தபோது எனக்கு தோன்றியது” என்றார். அவரது இந்தக் கருத்தை பார்த்த ரஜினி ரசிகர்கள், என்னது ரஜினி நடித்த பில்லா படம் தோல்வி படமா?.. அது எவ்வளவு பெரிய ஹிட் என்று தமிழ்நாட்டுக்கே தெரியும் என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X