கோவை பெண்ணை மணந்தார் 'கழுகு' கிருஷ்ணா
கோவை: கழுகு பட புகழ் நடிகர் கிருஷ்ணா கோவையைச் சேர்ந்த கைவல்யாவை இன்று மணந்தார்.
கழுகு படம் மூலம் பிரபலம் ஆனவர் நடிகர் கிருஷ்ணா. பிரபல தயாரிப்பாளரான பட்டியல் சேகரின் மகன் தான் கிருஷ்ணா. இயக்குனர் விஷ்ணுவர்தன் கிருஷ்ணாவின் அண்ணன் ஆவார்.
கிருஷ்ணாவுக்கும், கோவையைச் சேர்ந்த கைவல்யாவுக்கும் கடந்த நவம்பர் மாதம் 20ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது.

திருமணம்
கோவையில் உள்ள மேட்டுப்பாளையத்தில் பெரியோர்கள் ஆசியுடன் கிருஷ்ணா, கைவல்யா திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

சாப்ட்வேர் என்ஜினியர்
கோவையைச் சேர்ந்த ரங்கநாதன்-வாசுகி தம்பதியின் மகளான கைவல்யா ஒரு சாப்ட்வேர் என்ஜினியர். இது பெற்றோர் பார்த்து நடத்தி வைத்துள்ள திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபலங்கள்
கிருஷ்ணாவின் திருமணத்தில் நடிகர் ராதாரவி, இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட ஏராளமான திரை உலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

அதர்வா
தனது நண்பன் கிருஷ்ணாவுக்கு திருமணம் முடிந்த செய்தியை நடிகர் அதர்வா முரளி ஃபேஸ்புக்கில் தெரிவித்து புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

திருமண வரவேற்பு
திருமணம் கோவையில் நடைபெற்றாலும் கிருஷ்ணா-கைவல்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது. கிருஷ்ணா தற்போது விழித்திரு, வன்மம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











