அஜீத்தை வைத்து ஹாலிவுட் படம் - இது விஷ்ணுவர்தன் ஆசை
அஜீத்தை ஹாலிவுட்டில் முற்றிலும் வித்தியாசமாகக் காட்ட விரும்புவதாக இயக்குநர் விஷ்ணுவர்தன் கூறியுள்ளார்.
நடிகர் அஜீத்தை வைத்து ரஜினியின் 'பில்லா' படத்தை ரீமேக் செய்தவர் விஷ்ணுவர்தன்.
அஜீத்தை வைத்து இரண்டாவது முறையாக 'ஆரம்பம்' என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இந்தப் படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. வரும் தீபாவளிக்கு படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
அஜீத் பற்றியும் அவருடன் பணியாற்றியது குறித்தும் விஷ்ணுவர்தன் கூறுகையில், "எனக்கு ஹாலிவுட்டில் ஒரு படம் பண்ண வேண்டும் என்ற ஆசை உள்ளது. எனக்கு மிகவும் வசதியான ஹீரோ அஜீத்தான். எங்களுக்குள் நல்ல புரிதல் உள்ளது.

அஜீத்தை ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டில் ஒரு முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காட்ட விரும்புகிறேன். அஜீத் தற்போது ரொம்பவும் பிசியாக உள்ளார். வாய்ப்பு கிடைக்கும்போது இந்தியிலும், ஹாலிவுட்டிலும் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளேன்.
ஆரம்பத்தில் பாலிவுட்டில் கால் பதிக்கவேண்டும் என்றுதான் எண்ணினேன். பாலிவுட் செல்வதற்கு கோலிவுட் திரையுலகம் எளிதாக உதவும் என்பதற்காக இங்கு கணக்கை தொடங்கி விட்டேன். நல்ல கதை இருந்தால் போதும், பாலிவுட்டில் பெரிய ஆளாக ஆகிவிடலாம்," என்றார்.


Click it and Unblock the Notifications











