அஜீத்தை இயக்கி, தயாரிக்கிறேனா?: விஷ்ணுவர்தன்

By Siva

சென்னை: எனது அடுத்த படத்தில் அஜீத் குமார் நடிக்கிறார் என்று கூறுவதில் உண்மை இல்லை என்று இயக்குனர் விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார்.

அஜீத் குமாரை வைத்து ஆரம்பம் என்னும் வெற்றிப் படத்தை கொடுத்தவர் இயக்குனர் விஷ்ணுவர்தன். அவர் அடுத்ததாக என்ன படம் எடுக்கப் போகிறார், முக்கியமாக யாரை ஹீரோவாக நடிக்க வைக்கப் போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தான் விஷ்ணுவின் அடுத்த படம் குறித்த தகவல் பரவியது.

தயாரிப்பாளர்

தயாரிப்பாளர்

விஷ்ணுவர்தன், விஷ்ணுவர்தன் பிலிம்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்குகிறார் என்று தகவல் வெளியானது.

அஜீத்

அஜீத்

விஷ்ணுவர்தன் பிலிம்ஸ் மூலம் அஜீத் குமாரை வைத்து தானே ஒரு படத்தை இயக்கி, தயாரிக்கவிருக்கிறார் விஷ்ணு என்று செய்திகள் வெளியாகின.

என்ன விஷ்ணு?

என்ன விஷ்ணு?

நான் அஜீத்தை வைத்து படம் எடுக்கவில்லை. நான் அடுத்த படத்திற்கான கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன். இந்த வேலை முடிந்த பிறகே நடிகர்களை முடிவு செய்வேன். தயாரிப்பு நிறுவனம் எல்லாம் துவங்கவில்லை என்றார் விஷ்ணு.

வதந்தி

வதந்தி

கதையை எழுதி முடித்த பிறகே நடிகர், நடிகைகளை தேர்வு செய்வேன். அப்படி இருக்கையில் நான் அஜீத்தை இயக்குகிறேன் என்று வரும் செய்திகள் எல்லாம் வெறும் வதந்தி என்று விஷ்ணுவர்தன் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X