இயக்குனர் விஷ்ணுவர்தனின் முதல் இந்தி படத்தின் டீசர் மற்றும் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது !
மும்பை : தமிழில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் விஷ்ணுவர்தன்.
அறிந்தும் அறியாமலும், ஆரம்பம், பில்லா உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்த இவர் இப்பொழுது இந்தி துறையிலும் கால் தடத்தை பதித்து வருகிறார்.
அந்த வகையில் கார்கில் போரை மையப்படுத்தி உருவாகி வரும் "சேர்ஷா" படத்தை இயக்கியிருக்க இப்பொழுது அதன் டீஸர் மற்றும் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.

திருப்புமுனையை கொடுத்த
சமீபகாலமாகவே தமிழ் இயக்குனர்கள் பலர் வேற்று மொழிகளில் படங்களை இயக்க தொடங்கிவிட்டனர். அந்த வகையில் நடிகர் அஜித்தை வைத்து தொடர்ந்து இரண்டு பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் விஷ்ணுவர்தன் இப்போது இந்தி பட உலகில் தன்னுடைய கால் தடத்தை பதித்து வருகிறார். அஜித்திற்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த பில்லா மற்றும் ஆரம்பம் ஆகிய படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன் என்பது குறிப்பிடத்தக்கது .

"சேர்ஷா"
22 ஆண்டுகளுக்கு முன்பு கார்கில் போரில் எதிரிகளை உள்ளே நுழையவிடாமல் தடுத்து இந்திய ராணுவத்தால் நடத்தப்பட்ட போரில் நடந்த உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு "சேர்ஷா" படம் உருவாகி உள்ளது. அப்பொழுது இந்திய ராணுவத்தில் கேப்டனாக பணிபுரிந்த 24 வயதே ஆன விக்ரம் பத்ரா வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் விக்ரம் பத்ரா கதாபாத்திரத்தில் சித்தார்த் மல்கோத்ரா நடித்துள்ளார். ஜோடியாக நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார். தர்மா புரோடக்சன்ஸ் மற்றும் காஷ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளது.

தேசியப் பற்றின் மூலம்
இந்தியாவின் முதல் டெலிவிஷன் போர் என அழைக்கக் கூடிய கார்கில் போர் சுமார் 16 ஆயிரம் அடி உயரத்தில் இந்தியாவில் நடைபெற்ற கடுமையான போர்களில் ஒன்றாகும். கார்கில் போரில் நடந்ததை அப்படியே சித்தரிக்கும் விதமாக பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள
"சேர்ஷா" உருவாகி உள்ளது. காட்சிக்கு காட்சி தேசியப் பற்றின் மூலம் புல்லரிக்க வைக்கும் இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகி உள்ளது.

அமேசான் தளத்தில்
ஜூலையில் திரையரங்குகளில் வெளியாக இருந்த இந்தப்படம் கொரோனா சூழல் காரணமாக நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது என்ற தகவல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது . ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ளதால் இப்படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி அமேசான் தளத்தில் வெளியாகிறது. அதன்படி ரிலீஸ் தேதியுடன் கூடிய அட்டகாசமான டீஸரையும் படக்குழு வெளியிட்டு பிரமிக்க வைத்துள்ளது. இயக்குனர் விஷ்ணுவர்தனின் முதல் இந்தி திரைப்படம் என்பதால் இந்தி ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களும் இந்த படத்தைக் காண ஆவலுடன் எதிர்ப்பார்த்து உள்ளனர்.


Click it and Unblock the Notifications











