Vishwanathan & Sons: விஸ்வநாதன் & சன்ஸ் படத்தில் சூர்யா பாடிய பாட்டு.. எப்போது ரிலீஸ் தெரியுமா?

சென்னை: சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'விஸ்வநாத் & சன்ஸ்'. இதில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்க, ராதிகா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 'கருப்பு' திரைப்படத்தைப் போலவே இதுவும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவும் சூழலில், இந்தப் படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் கொடுத்துள்ளார்.

'கங்குவா', 'ரெட்ரோ' ஆகிய படங்கள் சூர்யாவின் திரைப்பயணத்தில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அந்தப் படங்களுக்குப் பிறகு, ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான 'கருப்பு' திரைப்படத்தில் சூர்யா நடித்தார். இதில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க, இந்திரன்ஸ், சுவாசிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சாய் அபயங்கர் இசையமைப்பில் வெளியான 'கருப்பு' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூலித்து மெகா பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது.

'கருப்பு' படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் திரைப்படம் 'விஸ்வநாத் & சன்ஸ்'. 'வாத்தி', 'லக்கி பாஸ்கர்' போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இப்படத்தை இயக்கியுள்ளார். தற்போது சென்சேஷனல் நாயகியாக வலம் வரும் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்துள்ளார். சித்தாரா என்டர்டெய்ன்மென்ட்ஸ் சார்பில் நாக வம்சி தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி தியேட்டர்களில் கோலாகலமாக வெளியாகிறது.

Vishwanathan amp amp Sons When Will Suriya s New Song Release Producer Hails the Film as a Blockbuster

'கருப்பு' படத்தின் வெற்றியைப் போலவே இந்தப் படமும் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்று சூர்யாவின் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். இதற்கு முன்பாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டானது. எனவே, அதே மேஜிக் இந்தப் படத்திலும் தொடரும் என்றும், படம் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என்றும் ரசிகர்கள் நம்புகின்றனர். சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளியான 'பட்டாம்பூச்சி' என்ற முதல் பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

முதல் பாடலுக்கு வரவேற்பு: சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வரும் இப்பாடலுக்குப் பலரும் நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக, இப்பாடலில் வரும் மமிதாவின் துள்ளலான நடனமும், க்யூட்டான எக்ஸ்பிரெஷன்களும் ரசிகர்களை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகின்றன. இத்தகைய சூழலில், படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் நாக வம்சி சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது விமர்சனத்தைப் பகிர்ந்துள்ளார்.

Vishwanathan amp amp Sons When Will Suriya s New Song Release Producer Hails the Film as a Blockbuster

விமர்சனம்: படம் குறித்து அவர் பேசுகையில், "நான் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தைப் பார்த்துவிட்டேன். இந்தப் படம் 200 சதவீதம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. தியேட்டர்களில் இந்தத் திரைப்படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் நிச்சயம் கொண்டாடுவார்கள். இது குடும்பத்துடன் அனைவரும் ரசிக்கக்கூடிய ஒரு சிறந்த திரைப்படமாக இருக்கும். மிகவும் பிரம்மாண்டமாக இப்படம் ரிலீஸாகவுள்ளது" என்று தெரிவித்துள்ளார். தயாரிப்பாளரின் இந்த முதல் விமர்சனம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இரண்டாவது பாடல்: இந்நிலையில் படத்தின் இரண்டாவது பாடல் வரும் 23ஆம் தேதி அதாவது சூர்யாவின் பிறந்த நாளன்று வெளியாகும் என்று இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஏற்கனவே படத்தின் ரிலீஸ்க்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X