கமல் படம் போன்று அஜீத்தின் ஆரம்பமும் தீபாவளிக்கு வராதாம்
சென்னை: கமலின் விஸ்வரூபம் 2 போன்று அஜீத்தின் ஆரம்பமும் தீபாவளிக்கு ரிலீஸாகாது போன்று.
கமல் ஹாஸனின் விஸ்வரூபம் 2 படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தீபாவளிக்கு விஸ்வரூபம் 2 வெளியாகாது என்று தகவல்கள் கிடைத்துள்ளன.
விஸ்வரூபம் 2 போன்று அஜீத்தின் ஆரம்பமும் தீபாவளிக்கு வாராதாம்.

சோலோ
ஆரம்பம் தீபாவளிக்கு வராமல் சோலோவாக வரப் போகுதாம். அவ்வாறு ரிலீஸ் செய்தால் படத்தின் வசூல் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார்கள்.

இசை வெளியீடு எப்பொழுது?
செப்டம்பர் முதல் வாரத்தில் ஆரம்பம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் என்று கூறப்பட்டது. நாளை மறுநாள் செப்டம்பர் மாதமும் பிறக்கப் போகிறது. ஆனால் இதுவரை இசை வெளியீடு குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

தீபாவளி
முன்னதாக தீபாவளி அன்று ரிலீஸான அஜீத்தின் வில்லன், வரலாறு ஆகிய படங்கள் நன்றாக ஓடின. ஆனால் இந்த தீபாவளியை 'தல' மிஸ் செய்கிறார்.

டேட்ஸ் அறிவிப்பாங்கள்ள?
படத்திற்கு ஆரம்பம் என்ற பெயரை வைக்கவே பல காலம் எடுத்துக் கொண்டார்கள். இந்நிலையில் இசை வெளியீடு மற்றும் ரிலீஸ் தேதியை அறிவிக்க எத்தனை நாட்கள் எடுக்கப் போகிறார்களோ என்று அஜீத் ரசிகர்கள் முணுமுணுக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











