விஸ்வரூபம் 2 இறுதிகட்ட ஷூட்டிங் துவக்கம்: டிசம்பரில் ட்ரெய்லர், இசை வெளியீடு
சென்னை: விஸ்வரூபம் 2 படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடந்து வருகிறது.
விஸ்வரூபம் படத்தின் 2ம் பாகமான விஸ்வரூபம் 2 எப்பொழுது ரிலீஸாகும் என்று ரசிகர்கள் கமல் ஹாஸனை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் திங்கட்கிழமை துவங்கியுள்ளது. ஒரு வாரத்தில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளார்கள்.
ஒரு வாரத்துடன் ஷூட்டிங் முடிந்து பிற வேலைகள் துவங்கப்படும். ட்ரெய்லரை அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். இசை வெளியீடு அடுத்த மாத இறுதியில் நடக்குமாம்.
விஸ்வரூபம் படத்தை விட இரண்டாம் பாகத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இருக்கும். படத்தில் ரசிகர்களுக்கு கமல் மெகா விருந்து கொடுப்பார் என்று கூறப்படுகிறது.
விஸ்வரூபம் படம் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து ரிலீஸானது. விஸ்வரூபம் 2 எப்படியோ?


Click it and Unblock the Notifications











