விஸ்வரூபம் பூஜா குமாரை ஞாபகமிருக்கா?.. நீச்சல் குளத்தில் தனது மகளுடன் எப்படி விளையாடுறாரு பாருங்க!

சென்னை: கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தில் ஹீரோயினாக நடித்த பூஜா குமார் திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய நிலையில், தற்போது தனது மகளுடன் நீச்சல் குளத்தில் குளித்து விளையாடும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினருக்கு மகளாக பிறந்து வளர்ந்த பூஜா குமார் இளம் வயதிலேயே மாடலிங்கில் ஆர்வம் காட்டிய நிலையில், 1995ல் மிஸ் இந்தியா யுஎஸ்ஏ பட்டம் வென்றார்.

Vishwaroopam actress Pooja Kumar playing in swimming pool with her daughter video trending

அதன் பின்னர், 1997ம் ஆண்டு காதல் ரோஜாவே படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் பூஜா குமார்.

ஆங்கில படங்களில் அதிகமாக: காதல் ரோஜாவே, மேஜிக் மேஜிக் 3டி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த பூஜா குமாருக்கு ஆங்கில படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் குவிந்தன. 2003ம் ஆண்டு வெளியான Flavors படத்தின் மூலம் ஆங்கில படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார் பூஜா குமார்.

Vishwaroopam actress Pooja Kumar playing in swimming pool with her daughter video trending

நைட் ஆஃப் ஹென்னா, ஹைடிங் திவ்யா, பாலிவுட் பீட்ஸ் என பல ஆங்கிலப் படங்களில் நடித்து வந்த பூஜா குமாரை விஸ்வரூபம் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு 2013ம் ஆண்டு கொண்டு வந்தார் கமல்ஹாசன்.

விஸ்வரூபம் படத்தில் மிரட்டல் நடிப்பு: கமல் இயக்கி நடித்த விஸ்வரூபம் படத்தில் டாக்டர் நிரூபமா விஸ்வநாத் கதாபாத்திரத்தில் பூஜா குமார் நடித்து மிரட்டி இருந்தார். விஸ்வரூபம் 2 படத்திலும் அதே கதாபாத்திரத்தில் பூஜா குமார் நடித்திருந்தார். மேலும், உத்தம வில்லன், மீன் குழம்பும் மண் பானையும் என தொடர்ந்து கமல்ஹாசன் நடித்த பல படங்களில் பூஜா குமார் நடித்திருந்தார்.

Vishwaroopam actress Pooja Kumar playing in swimming pool with her daughter video trending

2018ம் ஆண்டு விஸ்வரூபம் 2 வெளியான நிலையில், அதன் பின்னர், ஒரே ஒரு இந்தி படத்தில் நடித்த பூஜா குமார் விஷால் ஜோஷி என்பவரை 2019ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். அந்த தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

மகளுடன் நீச்சல் குளத்தில்: நடிகை பூஜா குமார் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்ந்து ரசிகர்களுடன் டச்சில் இருந்து வருகிறார். இந்நிலையில், தனது மகளுக்கு இரண்டரை வயது ஆகி விட்டது என்றும், எந்தவொரு துணையுமின்றி அவரே நீச்சல் அடிக்கிறார் என தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.

நடிகை பூஜா குமார் உடல் எடை அதிகரித்து பார்க்க ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், மீண்டும் கம்பேக் கொடுங்க மேடம் என்கிற கோரிக்கைகளும் கமெண்ட் பக்கத்தில் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X