For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'வரலாறு' அஜீத்தும், 'விஸ்வரூபம்' கமலும்

    By Siva
    |

    சென்னை: வரலாறு படத்தில் பரதநாட்டிய கலைஞராக வந்த அஜீத் குமார், விஸ்வரூபத்தில் கதக் நடன கலைஞராக வந்த கமல் ஹாசன் ஆகிய இருவரில் யாரிடம் அதிக நளினம் இருந்தது என்பதைப் பார்ப்போம்.

    'தல' அஜீத் குமார் முதன்முறையாக பரதநாட்டிய கலைஞராக நடித்த படம் வரலாறு. அந்த படத்திற்காக அவர் ஸ்லிம்மாகி இருப்பார். மேலும் நீளமாக முடி வளர்த்து நடையில் ஒரு நளினத்தை கொண்டு வந்திருப்பார். பரதநாட்டியம் நன்கு தெரிந்த கமல் ஹாசன் விஸ்வரூபம் படத்தில் கதக் நடன கலைஞராக நடித்துள்ளார்.

    அந்த படத்தில் அவரும் தலைமுடியை நீளமாக வளர்த்திருப்பார். மேலும் அவரின் நடை, பேச்சு ஆகியவற்றில் ஒரு நளினம் இருக்கும். விஸ்வரூபத்தில் கமலைப் பார்த்தவுடன் வரலாறு அஜீத் தான் நினைவுக்கு வந்தார்.

    பர்பக்ஷனிஸ்ட் கமல்

    பர்பக்ஷனிஸ்ட் கமல்

    கமல் நடிப்பில் மட்டுமல்ல டான்ஸிலும் சிறந்தவர். அவருக்கு ஆட கற்றுக்கொடுக்கவா வேண்டும். அவர் ஆடிய நாத வினோதங்கள் பாடலை இன்றும் யாராலும் மறக்க முடியாது.

    டான்ஸில் 'தல' ஓகே

    டான்ஸில் 'தல' ஓகே

    கமலுடன் ஒப்பிடுகையில் அஜீத் குமாரின் டான்ஸ் ஓகே தான். அதற்கு அவரது உடல்நிலையும் காரணம் என்று கூறலாம். அத்தனை அறுவை சிகிச்சை செய்த பிறகும் அவர் தன்னால் முடிந்த அளவுக்கு டான்ஸ் ஆடுகிறார்.

    நளினம் காட்டியதில் சிறந்தது கமலா, அஜீத்தா?

    நளினம் காட்டியதில் சிறந்தது கமலா, அஜீத்தா?

    விஸ்வரூபம் படத்தில் கமல் தனது நடை, பேச்சு, முக பாவணை என நடனத்துக்கே உரிய பெண்மை மிளிர வந்திருப்பார். அதைப் பார்க்கையில் அடடா கமல் தானா இது என்ற ஆச்சரியம் வந்தது. ஆனால் அவரைப் பார்க்கையில் ஏனோ வரலாறு அஜீத்தின் முகம் ஞாபகத்திற்கு வந்தது. அஜீத்தின் நளினமும், முக பாவணையும், மிடுக்கான நடையும் மனக்கண்ணில் வந்துபோனது. ஒரு வேளை கமலைவிட அஜீத்திடம் அதிக நளினம் இருந்ததோ என்று தோன்றியது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

    English summary
    Kamal's body language as a kathak dancer reminds people of Varalaru Ajith Kumar. Whom do you think as good in the body language as a classical dancer?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X