ரஜினிக்கு போட்டியாக கமல்.. 'விஸ்வரூபம் 2' பற்றிய முக்கிய அறிவிப்பு!
Recommended Video

சென்னை: கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜா குமார் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'விஸ்வரூபம் 2' திரைப்படத்தின் இறுதி கட்டப்பணிகள் நடந்து வருகிறது.
கடந்த டிசம்பர் மாதம் தான் இயக்கும் 'வீஸ்வரூபம் 2' படத்தின் இறுதிக்கட்ட சிஜி மற்றும் சவுண்ட் மிக்ஸிங் பணிகளுக்காக அமெரிக்கா சென்றிருந்தார் கமல்.
அரசியல் கட்சியைத் தொடங்கியிருக்கும் நிலையில், 'விஸ்வரூபம் 2' படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியிடப்படும் என ஃபேஸ்புக்கில் அறிவித்துள்ளார் கமல்.

விஸ்வரூபம் 2
கடந்த 2013-ம் ஆண்டு 'விஸ்வரூபம்' வெளியான உடனேயே, 'விஸ்வரூபம் 2' படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்துவிட்டதாகக் கூறப்பட்டது. பிறகு, ஷூட்டிங் நடத்தி முக்கால்வாசி முடித்தபின்னர் இப்படத்தின் அடுத்தக்கட்ட பணிகள் பல்வேறு காரணங்களால் முடங்கியது.

வேறு படங்கள் ரிலீஸ்
இதற்கிடையே, கமல்ஹாசன் நடித்த 'உத்தம வில்லன்', 'தூங்காவனம்','பாபநாசம்' உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியான நிலையில், 'விஸ்வரூபம் 2' எப்போது வெளியாகும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

கமல் தயாரிப்பு
ஆஸ்கர் ரவிச்சந்திரனிடம் இருந்த 'விஸ்வரூபம் 2' திரைப்படத்தின் உரிமத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனமே கைப்பற்றியது. திரைப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டடன.

விஸ்வரூபம் 2 ட்ரெய்லர்
விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியாக இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக்கில் நடிகர் கமல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். விரைவில் ட்ரெய்லர் மற்றும் பட வெளியீடு குறித்த தகவல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிக்கு போட்டியாக?
ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி 'காலா' படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டீசர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், கமலின் இந்த டீசர் அறிவிப்பு கமல் ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

மூன்று மொழிகளில்
'விஸ்வரூபம் 2' படத்தில் ஆண்ட்ரியா, பூஜா குமார், ராகுல் போஸ் ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகிறது 'விஸ்வரூபம் 2'. முதல் பாகத்தைப் போல சர்ச்சைகள் இல்லாமல் ரிலீஸ் ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











