#வேட்டிகட்டு... தூக்குதுரைன்னா அடாவடி... தூக்குதுரைன்னா அலப்பற... செம மாஸ் தல!
சென்னை : விஸ்வாசம் படத்தின் இரண்டாவது பாடலான வேட்டிகட்டு செம மாஸாக வந்துள்ளது என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள நான்காவது படம் விஸ்வாசம். வரும் பொங்கலுக்கு ரிலீசாக உள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டையுமே அஜித் ரசிகர்கள் திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.
ஏற்கனவே இப்படத்தின் சிங்கிள் ட்ராக் அடிச்சு தூக்கு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. டிரெண்டிங்கானது இப்பாடல். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் பாடலான வேட்டிகட்டு வெளியாகியுள்ளது.
இந்த பாடலையும் அஜித் ரசிகர்கள் டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர். பாடல் குறித்து பலரும் தங்கள் கருத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
செம மாஸ்
எதிர்பார்த்தது போலவே செம மாஸாக இருக்கிறது பாட்டு. பாடல் வரிகளும் இசையும் வேற லெவல். முழு திருப்தியாக உள்ளது என்கிறார் இந்த ரசிகர்.
யாரும் நிற்க முடியாது
இந்த ஒரு படம் போதும். அவர் (அஜித்) முன் யாரும் நிற்க முடியாது என்கிறார் இவர்.
ஹாட்ஸ் ஆப் இமான்
இமானுக்கு எங்கள் தலை தாழ்ந்த வாழ்த்துக்கள். வேட்டிகட்டு செம மாஸாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார் இந்த ரசிகர்.
தியேட்டர்ல இருக்கு கச்சேரி
அவரை (அஜித்தை) பாருங்கள். செம மூடில் இருக்கிறார். தியேட்டர்ல இருக்கு கச்சேரி என இந்த ரசிகர் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











