“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்!
விஸ்வாசம் பட போஸ்டரை வைத்து ரஜினி, விஜய் ரசிகர்கள் மீம்ஸ் தயாரித்துள்ளனர்.
Recommended Video

சென்னை: விஸ்வாசம் போஸ்டரில் இருப்பதைப் போலவே டிராக்டரில் நாயகன், நாயகி அமர்ந்திருக்கும் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள நான்காவது படம் விஸ்வாசம். வரும் பொங்கலுக்கு ரிலீசாக உள்ள இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
இப்படம் பற்றிய அப்டேட்களே இல்லை என கவலையில் இருந்த அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக, சமீபகாலமாக தொடர்ந்து அப்டேட்களைக் கொடுத்து அசத்தி வருகிறது படக்குழு.
அப்படியாக கடந்த சில தினங்களுக்கு முன்னர், விஸ்வாசம் படத்தில் அஜித்தின் தூக்கு துரை கதாபாத்திரத்தின் குடும்பம் என்ற புகைப்படம் வைரலானது. அதனைத் தொடர்ந்து, நயனும், அஜித்தும் பூக்கள் தூவுவது போன்ற புகைப்படம் டிரெண்டிங் ஆனது.
டிராக்டர் போட்டோ:
அதன் தொடர்ச்சியாக வயலில் டிராக்டர் ஒன்றில் அஜித்தும், நயனும் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் வெளியானது. இந்தப் புகைப்படத்தில் சேலை கட்டி, தலை நிறைய பூ வைத்து அசல் கிராமத்து பெண் போன்றே காணப்படுகிறார் நயன். தற்போது இந்தப் படமும் வைரலானதைத் தொடர்ந்து, இதேபோன்று தமிழ் சினிமாவில் டிராக்டரில் நாயகனும், நாயகியும் அமர்ந்திருக்கும் புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
கபாலி:
இது கபாலி படத்தில் ரஜினியும், ராதிகா ஆப்தேயும் டிராக்டரில் அமர்ந்திருக்கும் காட்சி. இதனை இந்த ரசிகர் பதிவிட்டுள்ளார்.
கடைக்குட்டி சிங்கம்:
இது கடைக்குட்டி சிங்கம் படக்காட்சி. இப்படத்தில் கார்த்தி விவசாயியாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சாயிஷா நடித்திருந்தார்.
வேட்டைக்காரன்:
இவர் தீவிர விஜய் ரசிகர் போல. விஜய்யின் வேட்டைக்காரன் படத்தில் இருந்து தான் இந்தக் காட்சி காப்பி அடிக்கப்பட்டுள்ளது என மீம்ஸ் வெளியிட்டுள்ளார். கிராமம் சார்ந்த விவசாயப் படமென்றாலே இது போன்ற காட்சிகள் சகஜம் தான் என்பது இவருக்குத் தெரியவில்லை போல.


Click it and Unblock the Notifications











