“அடாவடி.. அலப்பர.. தடாலடி... காட்டு அடி”.. விஸ்வாசம் அப்டேட்!
விஸ்வாசம் பட போஸ்டர்களைத் தயாரிக்கும் பணியில் தியேட்டர்கள் ஈடுபட்டுள்ளன.
Recommended Video

சென்னை: அஜித்தின் விஸ்வாசம் படத்திற்காக இப்போதே பேனர்களைத் தயாரிக்கும் பணியில் திரையரங்குகள் ஈடுபடத் தொடங்கிவிட்டன.
சிறுத்தை சிவாசும், அஜித்தும் நான்காவது முறையாக கூட்டணி அமைத்திருக்கும் படம் விஸ்வாசம். இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதால் படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பொங்கலுக்கு கண்டிப்பாக இப்படம் ரிலீசாகும் என இப்படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் அஜித் ரசிகர்களுக்கு உறுதி அளித்திருக்கிறார். இதனால் இறுதிக்கட்ட பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.
விஸ்வாசம் ரிலீசை திருவிழாவாகக் கொண்டாட ரசிகர்களும் தயாராகி வருகின்றனர். இப்போதே விஸ்வாசம் திருவிழா என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, இப்படம் தொடர்பான தகவல்களை சமூகவலைதளங்களில் அவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கம் பெயரில் விஸ்வாசம் திரைப்பட போஸ்டர் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில், '"அடாவடி.. அலப்பர.. தடாலடி... காட்டு அடி" என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
இதன் மூலம், விஸ்வாசம் பட போஸ்டர்களைத் தயார் செய்யும் பணியை திரையரங்குகள் தொடங்கி விட்டன என்பது தெரிய வருகிறது.
இதற்கிடையே நேற்று வெளியான விஸ்வாசம் மோஷன் போஸ்டர், யுடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











