Don't Miss!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- News ஜஸ்ட் 26 வயசு தான்! தனிஆளாய் பாஜக-காங்கிரசை மிரட்டும் ராஜ்புத் இளைஞர்! யார் இந்த ராஜஸ்தான் ரவீந்திரா
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
“விஸ்வாசம்”.. இதுவரை நாம உண்மைனு நினைச்சதெல்லாம் பொய்யாமே!
விஸ்வாசம் படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் தெரிய வந்துள்ளது.
Recommended Video
சென்னை: விஸ்வாசம் படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் தெரிய வந்துள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் நான்காவது திரைப்படம் விஸ்வாசம். வரும் பொங்கலுக்கு இப்படம் ரிலீசாக இருக்கிறது. இப்படத்தில் அஜித்தின் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
இந்நிலையில், விஸ்வாசம் படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் பற்றி, இதுவரை உலா வந்த பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
'பிக் பாஸ்' புகழைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஐஸ்.. கை நிறைய படங்கள்!
தந்தை - மகன்?
விஸ்வாசம் படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது. அதில் தந்தை கதாபாத்திரத்தின் பெயர் தூக்கு துரை என்றும், அவருக்கு ஜோடி காலா படப் புகழ் ஈஸ்வரி ராவ் என்றும் தகவல்கள் வெளியானது. இதேபோல், மகன் அஜித்தின் பெயர் சர்ப்பிரைஸ் என்றும், அவருக்கு ஜோடி தான் நயன்தாரா என்றும் கூறப்பட்டது.
தூக்கு துரை:
ஆனால், பட ரிலீசுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், இந்தத் தகவல் தவறானது என்பது தற்போது தெரிய வந்துள்ளது. விஸ்வாசம் படத்தில் அஜித் இரட்டை வேடம் இல்லையாம். தூக்கு துரை என்ற ஒரே கதாபாத்திரம் தானாம்.
நிரஞ்சனா:
ஆனால் படத்தில் அவர் இரண்டு விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளாராம். முரட்டுத்தனமான கிராமத்து இளைஞராக ஒரு பாதியிலும், மற்றொரு பாதியில் நகரத்து இளைஞர் போன்றும் அவர் தோன்ற இருக்கிறாராம். இதனால் படத்தில் ஒரே ஒரு நாயகி நயன் மட்டும் தானாம். படத்தில் அவரது பெயர் நிரஞ்சனா.
ஆர்வம்:
விஸ்வாசம் படப்பிடிப்பு தொடங்கிய நாளில் இருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்களையும் அஜித் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். விஸ்வாசம் ரிலீசை அவர்கள் திருவிழாவாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.