மெர்சல் படத்தை பாட்டுப் பாடி வரவேற்கும் விசிறி படக்குழு!
சென்னை: தமிழ் சினிமாவில் தலைமுறை தலைமுறையாக நடைபெறுவது ரசிகர்களின் மோதல். ஆம்! தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்கள் 'தியாகராஜ பாகவதர் - பி.யூ.சின்னப்பா' இவர்களின் ரசிகர்களிடம் ஏற்பட்ட மோதல்.
எம்.ஜி.ஆர். - சிவாஜி, ரஜினி - கமல் என்று தொடர்ந்தது. இன்றைய முன்னணி நடிகர்களான 'தல - தளபதி' ரசிர்களின் மோதலை மையக்கருவாக கொண்டு விரைவில் வெளிவரவிருக்கும் படம் 'விசிறி'

ஜ சா புரொடக்ஷன்ஸ் மூலமாக ஜமால் சாகிப் ஏ ஜாபர் சாதிக் பெருமையுடன் வழங்க, நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலைக் கருவாக கொண்டு வெளிவந்த 'வெண்நிலா வீடு' திரைப்படத்தின் இயக்குநர் வெற்றி மகாலிங்கம், மகாலிங்கம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கியிருக்கும் படம் விசிறி.
படத்தை வெளியிடத் தயாராக இருக்கும் படக்குழு, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விஜய்யின் மெர்சல் படத்தை வரவேற்று ஒரு காணொளியை இன்று வெளியிட்டுள்ளனர்.
ஒரு படத்தினை வரவேற்று இன்னொரு படக்குழு பாடல் வீடியோ வெளியிடுவது இதுவே முதல்முறையாகும் என்கிறது விசிறி படக்குழு.


Click it and Unblock the Notifications











