twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விடைபெற்றார் விசு.. லோ பட்ஜெட்டில் பிளாக்பஸ்டர் கண்ட நாயகன்.. கண்ணீர் சிந்தும் திரையுலகம்

    |

    சென்னை: நாடே கொரோனா வைரஸ் காரணமாக பயந்து கிடக்கும் நிலையில், நடிகரும் இயக்குநருமான விசு உடல் நலக்குறைவால் காலமான செய்தி தமிழ் சினிமா துறையையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    Recommended Video

    Actor Visu Passed Away | நடிகர் விசு உடல் நலக் குறைவால் காலமானார்

    இயக்குநர் சிகரம் பாலசந்தரின் சீடரான விசு, இயக்குநராக மட்டுமின்றி, கதையின் நாயகனாகவும் நடித்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

    சிறுநீரக கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் விசு, சிகிச்சை பலனின்றி இன்று இயற்கை எய்தினார்.

    விசுவின் இழப்பு தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது. நடிகர்கள், பிரபலங்கள் என பலரும் விசுவின் மறைவுக்கு கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    புத்தி கூர்மை

    புத்தி கூர்மை

    1945ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி பிறந்த மீனாட்சிசுந்தரம் ராமசாமி விஸ்வநாதன் சிறு வயது முதலே அதீத புத்தி கூர்மையுடனும், அறிவாளியாகவும் திகழ்ந்தார். சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த விஸ்வநாதன், நாடகங்களில் விசு என்ற சுருக்கமான பெயருடன் அழைக்கப்பட்டு, பின்னர் அதே பெயரிலேயே வெகுவாக அறியப்பட்டு வருகிறார்.

    சிகரத்தின் சீடன்

    சிகரத்தின் சீடன்

    இயக்குநர் சிகரம் பாலசந்தரின் உதவி இயக்குநராக பணியாற்றிய விசுவின் திறமையை அறிந்த பாலசந்தர், நிச்சயம் தமிழ்நாட்டின் சிறந்த இயக்குநராக விசு மாறுவார் என அப்போதே நினைத்து இருந்தார். கே. பாலசந்தர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 1981ம் ஆண்டு வெளியான தில்லு முல்லு படத்தில் உதவி இயக்குநராக இருந்த விசுவை பாலசந்தர் நடிக்க வைத்திருந்தார்.

    லோ பட்ஜெட் படங்கள்

    லோ பட்ஜெட் படங்கள்

    நாடகத்தில் அதிக ஆர்வம் கொண்ட விசு, குடும்ப நாடகங்களையே படமாகவும் இயக்கி வந்தார். பல நட்சத்திரங்கள் அவரது படத்தில் இருந்தாலும், அனைவருக்கும் சரியான முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, கதையின் நாயகனாகவும் விசு நடித்து அசத்தியிருப்பார். லோ பட்ஜெட்டில் படங்களை இயக்கினாலும், அதனை பிளாக்பஸ்டர் ஆக்கும் மேஜிக்கை விசு நன்கு அறிந்திருந்தார்.

    குடும்ப சிக்கல்கள்

    குடும்ப சிக்கல்கள்

    1982ம் ஆண்டு வெளியான கண்மணி பூங்கா படம் தான் விசு இயக்கிய முதல் திரைப்படம். அந்த திரைப்படத்தில், கிரிக்கெட்டர் ராம் குமார் என்ற கதாபாத்திரத்தில் விசு நடித்திருப்பார். அதே ஆண்டு வெளியான மணல் கயிறு திரைப்படம் தான் விசுவை தமிழ் சினிமா ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தது. குடும்ப சிக்கல்களை அந்த படத்தில் அவர் கையாண்ட விதத்தை இன்றும் பலர் பாராட்டி வருகின்றனர்.

    சூப்பர் ஹிட்

    சூப்பர் ஹிட்

    1986ம் ஆண்டு விசு இயக்கத்தில் வெளியான சம்சாரம் அது மின்சாரம் படம் தேசிய விருதை பெற்றது. தொடர்ந்து பெண்களை ஈர்க்கும் விதமாக பல குடும்ப படங்களை விசு இயக்கி உள்ளார். வேடிக்கை என் வாடிக்கை, திருமதி ஒரு வெகுமதி, டெளரி கல்யாணம், அவள் சுமங்கலி தான், சிதம்பர ரகசியம், வா மகளே வா என பல படங்களை இயக்கி ஹிட் கொடுத்துள்ளார்.

    அரட்டை அரங்கம்

    அரட்டை அரங்கம்

    தமிழ் சினிமாவில் மறக்க முடியாத இயக்குநராகவும், நடிகராகவும் கோலோச்சிய விசு, சன் டிவியில் ஒளிபரப்பான அரட்டை அரங்கம் நிகழ்ச்சியை பல ஊர்களில் நடத்தி மக்களின் நேரடி பாராட்டுக்களை பெற்றவர். விசுவின் பல படங்கள், விவாகரத்து செய்யாமல் இருக்க தேவையான பல உளவியல் ரீதியான கருத்துக்களை எடுத்துரைத்துள்ளது.

    குடும்ப வாழ்க்கை

    குடும்ப வாழ்க்கை

    உமா என்ற பெண்னை திருமணம் செய்துகொண்ட விசுவிற்கு லாவண்யா, சங்கீதா மற்றும் கல்பனா என 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் மூவரும் திருமணமாகி அமெரிக்காவில் செட்டில்லாகி விட்டனர். வயது முதிர்வு மற்றும் சிறு நீரக கோளாறு காரணத்தால் வீட்டில் ஒய்வு எடுத்து வந்த நிலையில், விசு இன்று காலமானார். திரையுலகினர் சமூக வலைதளங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    English summary
    Veteran Director and Actor Visu passed away due to kidney failure. Tamil cinema lost another super talented human being.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X