கண்ணம்மா கம்முட கெட டயலாக் உண்டா? உருவாகிறது சம்சாரம் அது மின்சாரம் 2.. ராஜ்கிரணிடம் பேச்சுவார்த்தை

By

சென்னை: சம்சாரம் அது மின்சாரம் படத்தில் இரண்டாம் பாகத்தில் நடிக்க ராஜ்கிரணிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

விசு இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளியான படம், 'சம்சாரம் அது மின்சாரம்'. ஏவி எம் நிறுவனம் தயாரித்திருந்தது.

குடும்ப உறவுகளை மையப்படுத்திய இந்தப் படம், சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

மின்சாரம் செட்

மின்சாரம் செட்

இந்தப் படத்தில் ரகுவரன், லட்சுமி, மனோரமா, விசு உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்காக ஏவி.எம் ஸ்டூடியோவில் போடப்பட்ட வீடு செட், பல வருடங்களாகப் பேசப்பட்டு வந்தது. அதை சம்சாரம் அது மின்சாரம் செட்
என்றே கூறிவந்தனர். அதில் மற்றப் படங்களின் ஷூட்டிங்கும் நடந்து வந்தது.

தயாரிப்பாளர் அமையவில்லை

தயாரிப்பாளர் அமையவில்லை

இப்போதும் குடும்ப உறவை மையப்படுத்தும் படங்களுக்கு உதாரணமாக இந்தப் படம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் இரண்டாம் பாகத்தை விசு இயக்கத் திட்டமிட்டிருந்தார். அதற்கான கதையையும் உருவாக்கி இருந்த அவர், தயாரிப்பாளர் அமையவில்லை என்று கூறியிருந்தார்.

விசு மகள் லாவண்யா

விசு மகள் லாவண்யா

இப்போது, சம்சாரம் அது மின்சாரம் 2 படம் உருவாகிறது. மக்கள் அரசன் பிக்சர்ஸ் சார்பில் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தை விசுவின் சிஷ்யர் வி.எல்.பாஸ்கர் ராஜ் இயக்க இருக்கிறார். கதை, திரைக்கதை, வசனத்தை ஏற்கனவே விசு எழுதியுள்ளார். இந்தப் படத்துக்கு உதவி வசனகர்த்தாவாக விசுவின் மகள் லாவண்யா பணிபுரியவுள்ளார்.

கம்முனு கெட

கம்முனு கெட

இசை அமைப்பாளராக பரத்வாஜ், ஒளிப்பதிவாளராக ராஜவேல் மோகன் பணியாற்றுகின்றனர். முக்கிய வேடத்தில் நடிக்க ராஜ்கிரணிடம் பேசி வருகின்றனர். 'இது அனைவரும்‌ ரசிக்கக்கூடிய குடும்பக் கதை என்றார் இயக்குனர். சம்சாரம் அது மின்சாரம் படத்தில் மனோரமாவின், கம்முனு கெட வசனம் பிரபலமானது. இதில் அது இருக்குமா தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X