twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மறக்க முடியுமா? 'சம்சாரம் அது மின்சாரம்' படத்தின் அந்த அம்மையப்ப முதலியாரை?

    By
    |

    சென்னை: குடும்பக் கதைகளின் மன்னன் என்று புகழ்கிறார்கள், மறைந்த இயக்குனர் விசுவை.

    Recommended Video

    Actor Visu Passed Away | நடிகர் விசு உடல் நலக் குறைவால் காலமானார்

    பிரபல இயக்குனர் விசு, சென்னையில் இன்று காலமாகி விட்டார். கடந்த சில மாதங்களாக உடல் நலமில்லாமல் அவதிப்பட்டு வந்தார்.

    வயது முதிர்வு மற்றும் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னை ஒக்கியம் துரைப்பாக்கத்தில் வசித்து வந்தார்.

    பன்முகத்தன்மை

    பன்முகத்தன்மை

    உடல்நிலை மோசமானதை அடுத்து தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு இன்று மாலை உயிரிழந்தார். இதை அடுத்து தமிழ் திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த திரை பிரபலங்கள் விரைந்துள்ளனர். இயக்குனர், எழுத்தாளர், நடிகர், தொகுப்பாளர் என பன்முகத்தன்மைக் கொண்டவர், விசு.

    உணர்வு ரீதியாக

    உணர்வு ரீதியாக

    தமிழ் சினிமாவில் குடும்ப கதைகளின் அரசன் என்கிறார்கள், இயக்குனர் விசுவை. அவர் இயக்கிய பெரும்பாலான படங்கள், குடும்பக் கதைகளை மையப்படுத்தியது. ஒவ்வொரு குடும்பத்துக்குள்ளும் நடக்கும் பிரச்னைகளை அப்படியே இயல்பாகத் திரையில் கொண்டு வந்தவர் விசு. காட்சிகளில் நாடகத்தன்மை இருந்தாலும் உணர்வு ரீதியாகக் கதைக்குள் ரசிகர்களை ஒன்ற வைத்தவர் அவர்.

    அம்மையப்ப முதலியார்

    அம்மையப்ப முதலியார்

    அதற்கு அவரது 'சம்சாரம் அது மின்சாரம்' படம் ஒன்றே சாட்சி. 1986 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில், அம்மையப்ப முதலியார் என்ற கேரக்டரில் நடித்திருப்பார் விசு. இந்தப் படத்தில் அவரது வசனங்களும் காட்சி அமைப்பும் ரசிகர்களிடையே பலத்தை வரவேற்பைப் பெற்றன. ஒரு குடும்பத்துக்குள் எட்டிப்பார்ப்பது போன்ற உணர்வை இந்தப் படம் தந்தது, ரசிகர்களுக்கு. அதனால்தான் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் அந்த படம் ரீமேக் ஆகி இருக்கிறது.

    குடும்பக் கதைகள்

    குடும்பக் கதைகள்

    தமிழ் சினிமாவில் தரமான குடும்ப படங்களை இயக்கியவர் பீம்சிங் என்பார்கள். அவரை அடுத்து அந்த இடத்தை அமர்க்களமாகப் பிடித்துக் கொண்டவர், இயக்குனர் டைரட்டர் விசு. அவர் படம் இயக்கிய, ஸ்கிப்ட் எழுதிய கால கட்டங்களில் ஒரு பக்கம் டி.ராஜேந்தரும், மற்றொரு பக்கம் கே.பாக்யராஜும் காதல் கதைகளில் கவனம் செலுத்த, இவர் குடும்பக் கதைகளின் மேல் அதிகம் செலுத்தினார்.

    பெண்மணி அவள் கண்மணி

    பெண்மணி அவள் கண்மணி

    அவர் இயக்கிய மணல் கயிறு, சிதம்பர ரகசியம், அவள் சுமங்கலிதான், கெட்டி மேளம், திருமதி ஒரு வெகுமதி, பெண்மணி அவள் கண்மணி உட்பட பெரும்பாலான கதைகளில் குடும்ப சிக்கல்கள் முன் வைக்கப்பட்டன. அவர் படங்கள், ஒரு வீட்டுப் பிரச்னையை கண்முன் காட்டுவது போல இருக்கும் என்று கூறுகிறார்கள், ரசிகர்கள். அதனால்தான் அவரது படங்களுக்கு அதிகமானப் பெண்கள், ரசிகர்களாக இருக்கின்றனர்.

    நாகர்கோயில் நாதமுனி

    நாகர்கோயில் நாதமுனி

    அவர் மறைந்தாலும், அவது மணல் கயிறு படத்தின் நாரதர் நாயுடு, சிதம்பர ரகசியம் படத்தின் பீமா ராவ், சம்சாரம் அது மின்சாரம் படத்தின் அம்மையப்பன் முதலியார், 'திருமதி ஒரு வெகுமதி படத்தின் நாகர்கோயில் நாதமுனி, உரிமை ஊஞ்சலாடுகிறது படத்தின் சண்முகம் உட்பட பல கேரக்டர்களின் வழியாக வாழ்ந்து கொண்டிருப்பார் என்கின்றனர் ரசிகர்கள்.

    English summary
    Director Visu- The king of family drama movies.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X