STR: சிம்புவுக்கு முத்தம் கொடுக்கனும்.. தக் லைஃப் பார்த்த பார்வை மாற்றுத்திறனாளி ரசிகர் எமோஷனல்!

சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி கடந்த 5ஆம் தேதி ரிலீஸான படம் தக் லைஃப். இந்த படத்தில் கமல்ஹாசன், சிம்பு, நாசர், அபிராமி, த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், வடிவுக்கரசி, வையாபுரி, ஐஸ்வர்யா லட்சுமி, பக்ஸ் பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். படம் 5ஆம் தேதி வெளியாகி இருந்தாலும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகின்றன. குறிப்பாக ரசிகர்கள் பலரும் படத்தைக் காட்டு மொக்கைப் படம், பழைய காலத்து பழிவாங்கல் கதை என காட்டமாக விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் படம் பார்த்த பார்வை மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர், சிம்புவுக்கு கன்னத்தில் ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் சிம்பு கமிட் ஆகியுள்ளார் என்று அறிவிப்பு வந்ததில் இருந்து சிம்பு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலரும் ஆவலாக காத்துக் கொண்டு இருந்தார்கள். இன்னும் சொல்லப்போனால், சிம்புவின் லுக் தெரிந்த பின்னர் ரசிகர்கள் இணையத்தில் ஃபயர் விடத் தொடங்கிவிட்டனர். அதிகப்படியான முடியுடன் சிம்புவைப் பார்த்ததும் மொத்த திரையுலகமே மணிரத்னம் இஸ் குக்கிங் சம்திங் என்று பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள். படத்தின் புரோமோஷன் என அனைத்திலும் அதே லுக்கில் சிம்பு கலந்து கொண்டார். சிம்பு படத்தில் இரண்டு விதமான லுக்கில் காணப்பட்டார். அதாவது இடைவேளை காட்சி முடிந்து சிறிது நேரம் வரை ஒரு லுக்கும் அதன் பின்னர் கொஞ்சம் உடல் எடையைக் கூட்டி ஒரு லுக்கும் என மிரட்டி விட்டிருந்தார்.

Visually Challenged Fan Who Like To Kiss STR Silambarasan After Listened Thug Life
Photo Credit:

மாற்றுத்திறனாளி ரசிகர்: சிம்புவுக்கு வைக்கப்பட்ட ஒவ்வொரு ஃபிரேமும் படத்தில் பிரமாதமாக சிம்பு ரசிகர்களை மகிழ்விக்கும் படியாக இருந்தது. இந்நிலையில் படம் பார்த்த பார்வை மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் சிம்பு மீது தனக்கு இருக்கும் அன்பை வெளிப்படுத்தியுள்ளார். அவர் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஒரே தலைவன் சிம்பு: அவர் பேசுகையில், " எனக்கு கடந்த 2023ஆம் ஆண்டு பார்வை போய்விட்டது. நான் சின்ன வயதில் இருந்தே சிம்பு ரசிகர். என்னால் இப்போது அவரை திரையில் பார்க்க முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது. மற்றபடி படத்தை ஆடியோவில் கேட்டது எனக்கு ரொம்பவும் சந்தோஷம். என்னால் தியேட்டருக்கு வரமுடியாதோ என்று நினைத்தேன். ஆனால் எனது நண்பன் உதவியால் தியேட்டருக்கு வந்துள்ளேன். ஒரே தலைவன் எஸ்.டி. ஆர் தான். சிறு வயதில் அவரது தந்தையுடன் சேர்ந்து கொண்டு அவரது நடிப்பு மிகவும் சிறப்பாக இருக்கும்.


கண்ணத்தில் முத்தம்: நான் தான் சிம்பு என் கையில் இருக்கு கம்பு என வசனம் பேசுவாரே, அது எனக்கு மிகவும் பிடித்துப் போனது. அதன் பின்னர் காதல் அழிவதில்லை, கோவில், குத்து, மன்மதன், வல்லவன் என அவரது படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த வீடியோவை அவர் பார்த்தால், இதனால் நான் அவரைச் சந்திக்க முடிந்தால் அவரது கண்ணத்தில் ஒரு முத்தம் கொடுக்க வேண்டும்" என்று பேசியுள்ளார். இவரது இந்த பேச்சு தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த வீடியோ காண்போரை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X