கமல் வெளியிட்ட புகைப்படத்திற்கு காரணம் இதுதான்... சர்ச்சையில் சிக்கும் 'விஸ்வரூபம் 2'

By Vignesh Selvaraj

Recommended Video

விஸ்வரூபம் 2 படத்திற்கு மேலும் ஒரு புதிய சர்ச்சை !!- வீடியோ

சென்னை : தனது ட்வீட்களின் மூலம் அரசியல் களத்தில் புரட்சி செய்து வந்த கமல், சில வாரங்களாக ட்விட்டர் பக்கம் தலை காட்டாமல் அமைதியாக இருக்கிறார்.

கமல் நள்ளிரவில் போடும் ட்வீட்களால் தூக்கம் கெட்டவர்கள் ஏராளம். அவரது ட்வீட்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே அரசியல் கட்சியினரும் விழித்திருக்க வேண்டிய கட்டாயம்.

கமல் இயக்கத்தில் உருவாகி வரும் விஸ்வரூபம்-2 படத்தின் ஒலிச்சேர்க்கை பணிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருவதால் ட்வீட் போட நேரமில்லாமல் தவிக்கிறாராம்.

விஸ்வரூபம் 2

விஸ்வரூபம் 2

கமல்ஹாசன், ராகுல் போஸ், பூஜா குமார், ஆண்ட்ரியா நடிப்பில் 2013-ம் ஆண்டு ரிலீஸான படம் 'விஸ்வரூபம். முதல் பாகத்தை இயக்கும்போதே, இரண்டாம் பாகத்துக்கான பெரும்பாலான காட்சிகளையும் படமாக்கி வைத்திருந்தார் கமல்ஹாசன்.

அமெரிக்காவில் கமல்

அமெரிக்காவில் கமல்

கமல்ஹாசன், சில வாரங்களாக அமெரிக்காவில் முகாமிட்டு 'விஸ்வரூபம் 2' படத்தின் இறுதிகட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அங்கே நாள் முழுவதும் வேலை இருப்பதால் வேறு பணிகளில் கவனம் செலுத்த முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் பிரச்னை

தயாரிப்பாளர் பிரச்னை

விஸ்வரூபம் முதல் பாகம் வெளியானதும் உடனடியாக இரண்டாம் பாகம் தொடங்கப்பட்ட நிலையில், அதன் தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும், கமலுக்கும் ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்னையால் படம் பாதியிலேயே நின்றது.

ஆஸ்கர் ரவிச்சந்திரன்

ஆஸ்கர் ரவிச்சந்திரன்

ஆஸ்கர் ரவிச்சந்திரன் கொடுத்த பணத்தை செட்டில் செய்துவிட்டு 'விஸ்வரூபம் 2' படத்தை தானே 'ராஜ்கமல் ஃபிலிம்ஸ்' சார்பில் தயாரிக்கும் முடிவில் தான் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளை தொடங்கினார். தற்போது ஆஸ்கர் ரவிச்சந்திரன் 'விஸ்வரூபம் 2' படத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று கூறி வருகிறாராம்.

போட்டோ பின்னணி

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட பிறகு தான், தயாரிப்பு - சந்திரஹாசன், கமல்ஹாசன் என்ற டைட்டில் கார்டு பின்னணியில் அமெரிக்க கலைஞர்களுடன் போட்டோ எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளாராம் கமல். இந்த மாத இறுதியில் கமல் இந்தியா திரும்ப இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X