விஸ்வரூபம் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு: இதுவாச்சும் கமல் கண் கலங்காமல் வெளியாகுமா?

By Siva

Recommended Video

இன்றைய டிரெண்டிங் சினிமா நிகழ்வுகள்- வீடியோ

சென்னை:கமல் ஹாஸன் நடித்துள்ள விஸ்வரூபம் 2 படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாயகன் கமல் ஹாஸன் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் விஸ்வரூபம் 2 என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ளது. பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கமல் எழுதி, இயக்கி நடித்துள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிலீஸ்

ரிலீஸ்

விஸ்வரூபம் 2 படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கமல் அரசியலுக்கு வந்த பிறகு வெளியாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று

இன்று

விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டது. ட்ரெய்லரை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ரிலீஸ் தேதி அறிவிப்பு மகிழ்ச்சி அளித்துள்ளது.

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

பட ரிலீஸ் அறிவிப்பு வெளியான கையுடன் கமல் ஹாஸன் தனது ஃபேஸ்புக் பக்கத்தின் ப்ரொபைல் பிக்சராக விஸ்வரூபம் 2 ஸ்டில்லை வைத்துள்ளார். மேலும் பட ரிலீஸ் அறிவிப்பையும் ஷேர் செய்துள்ளார்.

கமல்

கமல்

விஸ்வரூபம் படம் பல பிரச்சனைகளுக்கு பிறகே வெளியானது. பிரச்சனைகளால் கமல் கண் கலங்கியதுடன் நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று கூறினார். விஸ்வரூபம் 2 எந்த பிரச்சனையும் இல்லாமல் ரிலீஸாகும் என்று நம்புவோமாக.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X