கமல் பிறந்த நாளில்... விஸ்வரூபம் 2 அசத்தல் ட்ரைலர்!
கமல் ஹாசன் பிறந்த நாளில் விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரைலரை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
கமல் - பூஜா குமார் - ஆன்ட்ரியா நடித்த படம் விஸ்வரூபம். இந்தப் படம் பெரும் பிரச்சினைகளுக்கிடையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. நல்ல வசூலைப் பெற்றது.

கமல் இயக்கத்தில்
இப்போது அதன் இரண்டாம் பாகத்தை வெளியிடும் பணிகளில் மும்முரமாக உள்ளார். இந்தப் படத்தையும் கமல்ஹாஸனே இயக்கியுள்ளார். கமலும் ஆஸ்கர் பிலிம்ஸும் இணைந்து தயாரித்துள்ளன.

ட்ரைலர்
இந்தப் படத்தின் போஸ்டர்கள் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தன. இப்போது படத்தின் ட்ரைலரை பிரமிக்கும் வகையில் உருவாக்கியுள்ளாராம் கமல்ஹாஸன்.

பிறந்த நாளில்
கமல்ஹாஸனின் பிறந்த நாளில்தான் விஸ்வரூபம் முதல் பாகத்தின் ட்ரைலர் வெளியானது. அதேபோல இந்த முறையும் தன் பிறந்த நாளில் இரண்டாம் பாகத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விக்கப் போகிறார்.

மற்றவர்களின் படங்களுக்கு உதவி
விஸ்வரூபம் பணிகளில் ஒருக்கம் பிஸியாக இருந்தாலும், மற்ற கலைஞர்கள் நடித்த சின்ன பட்ஜெட் படங்களைப் பார்த்து அறிவுரை கூறுவதோடு, அந்தப் படங்களின் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று படங்களின் விளம்பரத்துக்கு பெரிதும் உதவி வருகிறார் கமல் என்பது குறிப்பிடத்தக்கது!


Click it and Unblock the Notifications











