விஸ்வரூபம் 2... பாக்கி பத்து நாள் ஷூட்டிங்கை கமல் நடத்தப்போவது எங்கே தெரியுமா?
இந்தப் படம் அவ்வளவுதான்... வராது என்றே திரையுலகினர் முடிவெடுத்துவிட்ட நிலையில், விஸ்வரூபம் 2 படத்தை சீரியஸாகவே கையிலெடுத்துவிட்டார் கமல் ஹாஸன்.
படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் கூட ஓரளவு முடிந்துவிட்டது. பாக்கியிருப்பது பத்து நாள் ஷூட்டிங் மட்டும்தான். இதுதான் தயாரிப்பாளருக்கும் கமல் ஹாஸனுக்கும் பஞ்சாயத்து வரக் காரணமாக இருந்தது.

இப்போது படத்தை கமலே முழுசாகக் கையில் எடுத்துக் கொண்டார். விரைவில் அந்த 10 நாள் படப்பிடிப்பையும் நடத்தப் போகிறார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்துள்ள இடம் சென்னையில் உள்ள ராணுவ அலுவலர் பயிற்சி மையம் (ஓடிஏ). செயின்ட் தாமஸ் மலையில் உள்ள இந்தப் பகுதியில் படப்பிடிப்பு நடத்த அனுமதி இல்லை. ஆனால் கமல் ஹாஸனுக்காக சிறப்பு அனுமதி கொடுத்திருக்கிறார்களாம்.
இந்த ஆண்டு அக்டோபரில் படம் வெளியாகும் என்று கூறியுள்ளார் கமல் ஹாஸன்.


Click it and Unblock the Notifications











