twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ், இந்தி, தெலுங்கு.. அனைத்து மொழிகளிலும் ஆரோ 3 டியில் விஸ்வரூபம் 2!

    By Shankar
    |

    சென்னை: விஸ்வரூபம் 2 தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ஆரோ 3 டி தொழில் நுட்பத்தில் வெளியாகும் என கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.

    கமல் தயாரித்து, இயக்கி, நடித்த விஸ்வரூபம் படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியானது. இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பு மட்டுமே ஆரோ 3 டி ஒலியில் வெளியானது.

    மற்ற மொழிகளில் சாதாரண டிடிஎஸ்ஸில்தான் வெளியானது.

    ஆனால் இந்த முறை அந்தக் குறை வைக்காமல், அனைத்து மொழிகளிலும் ஆரோ 3 டியில் வெளியிடுகிறார் கமல். இதனை கமல் ஹாஸனே இன்று அறிவித்துள்ளார்.

    கமல் இந்த அறிவிப்பை வெளியிட முக்கிய காரணம், ஆந்திராவில் 100 புதிய அரங்குகளில் ஆரோ 11.1 ஒலி நுட்பத்தை வழங்குவதாக பார்கோ நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதுதான்.

    இந்தியாவில் ஆரோ 3டி தொழில்நுட்பத்தை பார்கோ நிறுவனம்தான் திரையரங்குகளுக்கு வழங்கி வருகிறது.

    ஜனவரி இறுதியில் உலகம் முழுவதும் வெளியாகிறது விஸ்வரூபம் 2. இப்போது ஹாலிவுட்டில் வைத்து சவுண்ட் மிக்ஸிங் பணிகள் நடந்து வருகின்றன இந்தப் படத்துக்கு.

    English summary
    While the first part of the Kamal film Vishwaroopam was released with Auro 3D sound only in Tamil, the second part will be released with Auro 3D sound in all three languages (Telugu, Hindi and Tamil); The mixing of which will happen in Hollywood shortly.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X