7 மாவட்டங்கள், புதுச்சேரியில் வெளியாகாத விஸ்வரூபம் 2: ரசிகர்கள் ஏமாற்றம்
Recommended Video

விஸ்வரூபம் 2 ஏன் 7 மாவட்டங்களில் ரிலீஸ் ஆகல தெரியுமா?- வீடியோ
மதுரை: கமலின் விஸ்ரூபம் 2 படம் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று ரிலீஸாகவில்லை.
கமல் ஹாஸன் இயக்கி நடித்த விஸ்வரூபம் 2 படம் இன்று வெளியாகியுள்ளது. முதல் காட்சி காசி தியேட்டரில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் மதுரை, தேனி, திண்டுக்கல், கடலூர், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் படம் ரிலீஸாகவில்லை.
மேலும் புதுச்சேரியிலும் படம் வெளியாகவில்லை. விஸ்வரூபம் 2 படம் பார்க்க ஆவலுடன் தியேட்டர்களுக்கு சென்ற ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

எங்க ஏரியாவில் படம் ரிலீஸாகவில்லை என்று பலர் ட்வீட்டி வருகிறார்கள். தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் படம் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.
சுமார் 60 தியேட்டர்களில் படம் ரிலீஸாகாததால் ரூ. 4 கோடி முதல் ரூ. 5 கோடி வரை நஷ்டம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications