பேட்ட ரிலீஸால் விஸ்வாசத்திற்கு பாதிப்பு இருக்காது: சத்யஜோதி தியாகராஜன் நம்பிக்கை
Recommended Video

சென்னை: பேட்ட ரிலீஸால் விஸ்வாசம் படத்திற்கு பாதிப்பில்லை என சத்ய ஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தெரிவித்துள்ளார்
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகியுள்ளது. அதேபோல் ரஜினியின் பேட்ட திரைப்ப்படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

பேட்ட திரைப்படம் பொங்கல் மற்றும் குடியரசு தின விடுமுறை வசூலை குறிவைத்து களமிறக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இரண்டு திரைப்படங்களுக்கும் அவற்றுக்கான வசூல் பாதிப்பு இருக்கும் என்கின்றனர்.
சர்கார் திரைப்படத்தைப் பொருத்தவரை தீபாவளிக்கு தனியாக ரிலீஸானதால் அதற்கான முதல்நாள் வசூலை அள்ளியது என்றும் அதேபோல் பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்களுக்கு நிகழ வாய்ப்பில்லை என்றும் சினிமா வர்த்தக பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர். 2014 ஆம் ஆண்டு வீரம் மற்றும் ஜில்லா படங்கள் பொங்கலுக்கு ரிலீஸாகின. ஆனால் அவை வெவ்வேறு தேதிகளில் ரிலீஸானதால் இரண்டு படங்களுக்கும் முதல் நாள் வசூல் பாதிக்கப்படவில்லை. குடும்பப் படமாக வீரம் அமைந்ததால் தப்பித்தது. ஜில்லா எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என விநியோகஸ்தர் அகமது ஷா தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பேசிய விஸ்வாசம் திரைப்பட தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், நாங்கள் எட்டு மாதங்களாக பொங்கலுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். அஜித்திற்கு மிகப்பெரிய ரசிகப் பட்டாளம் உள்ளது. அதனால் விஸ்வாசம் நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த திரைப்படங்களோடு சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன், ஆர்ஜே. பாலாஜியின் எல்.கே.ஜி ஆகிய படங்களும் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











