ரஜினியை முந்திய அஜித்: 27 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த 'தரமான சம்பவம்'
சென்னை: 27 ஆண்டுகள் கழித்து தமிழக பாக்ஸ் ஆபீஸில் ரஜினியின் படம் ரிலீஸான அன்று 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் படமும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும் ஒரே நாளில் வெளியாகின. ரஜினியின் படத்துடன் மோதினால் விஸ்வாசம் என்னவாகும் என்று பேச்சு கிளம்பியது.
இந்நிலையில் தமிழகத்தில் விஸ்வாசம் பேட்ட படத்தை வசூலில் பின்னுக்குத் தள்ளிவிட்டது.

விஸ்வாசம்
தமிழகத்தில் படம் ரிலீஸான அன்று விஸ்வாசம் முதலிடத்திலும், பேட்ட இரண்டாவது இடத்திலும் இருந்தது. தற்போதும் தமிழகம், கேரளாவில் விஸ்வாசம் பேட்ட படத்தை விட நல்ல வசூல் செய்து கொண்டிருக்கிறது.

ரஜினி
முன்னதாக 1992ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் தேதி கமல் ஹாஸனின் தேவர் மகனும், ரஜினியின் பாண்டியன் படமும் ரிலீஸானது. அப்பொழுது ரிலீஸ் நாளில் தேவர் மகன் பாண்டியனை பின்னுக்குத் தள்ளியது. அதன் பிறகு 27 ஆண்டுகள் கழித்து அஜித் படம் அந்த காரியத்தை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிட்
விஸ்வாசம் படத்தில் உள்ள அளவான குடும்ப சென்டிமென்ட் அதற்கு கை கொடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக பி. மற்றும் சி. சென்டர்களில் விஸ்வாசம் எடுத்த எடுப்பிலேயே ஹிட்டாகிவிட்டது.

ரசிகர்கள்
ரஜினியின் பேட்ட படத்துடன் விஸ்வாசம் மோதவில்லை இரண்டு படங்களும் சேர்ந்து வருகிறது, சேர்ந்து நல்ல வசூல் செய்தால் சந்தோஷம் என்றார் சிவா. இந்நிலையில் விஸ்வாசம் தமிழகத்தில் பேட்ட படத்தை முந்திக் கொண்டு செல்வது அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications











