விஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்!

விஸ்வாசம் படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர் திடீர் மரணமடைந்ததால் சோகம் ஏற்பட்டுள்ளது.

Recommended Video

விஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்து உயிரிழந்த ரசிகர்- வீடியோ

புதுச்சேரி: புதுச்சேரியில் விஸ்வாசம் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படம் ரிலீசான நாள் முதல் நல்ல விமர்சனங்களைப் பெற்று வரும் விஸ்வாசம் படம் சில காரணங்களால் சோகமான சம்பவங்களிலும் அடிபட்டு வருகிறது.

Viswasam: Fan dies in theater

அஜித் கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் பண்ண முயற்சித்த ரசிகர் பரிதாபமாக பலியானது, படம் பார்க்க காசு தராத தந்தையை மகனே எரித்தது, தியேட்டரில் சீட் பிரச்சினையில் கத்திக்குத்து நடந்தது என அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் அஜித் ரசிகர்கள் சோகமடைந்தனர்.

இந்நிலையில், விஸ்வாசம் ஓடும் தியேட்டர் ஒன்றில் மீண்டும் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது. புதுச்சேரியில் உள்ள தியேட்டர் ஒன்றில் கோவையைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் நண்பர்களுடன் விஸ்வாசம் படம் பார்க்கச் சென்றுள்ளார்.

இடைவேளை வரை படத்தை ஜாலியாக விசில் அடித்துப் பார்த்த ராம்குமார், திடீரென வாந்தி எடுத்து மயங்கியுள்ளார். ஏற்கனவே அவர் மது அருந்தி இருந்ததால், போதையில் தான் மயங்கி விட்டார் என அவரது நண்பர்கள் நினைத்துள்ளனர். ஆனால் படம் முடிந்தும் அவர் எழவில்லை.

இதனால் சந்தேகமடைந்த நண்பர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

விஸ்வாசம் படம் பார்க்க மகிழ்ச்சியாக வந்த நண்பர்கள், ராம்குமாரின் மரணத்தால் சோகமடைந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X