Viswasam First Review: அஜித் மிரட்டல்.. படம் மாஸ்.. வெளியானது முதல் விமர்சனம்!

Recommended Video

தல மிரட்டல் விஸ்வாசம் வேற லெவல் படம்- ரசிகர்கள் கருத்து| Filmibeat Tamil

சென்னை: விஸ்வாசம் படத்தின் முதல் விமர்சனமாக தனது கருத்தை பதிவிட்டுள்ளார் ஐக்கிய அரபு நாடுகள் சென்சார் போர்டு உறுப்பினர் உமர் சந்து.

ஐக்கிய அரபு நாட்டின் சென்சார் போர்டு உறுப்பினர்களில் ஒருவரான உமர் சந்து, சமீபகாலமாக தமிழின் முன்னணி நடிகர்கள் படத்தை ரிலீசுக்கு முன்னதாக தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சனமாக வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அவரது விமர்சனம் ஏறக்குறைய மிகச் சரியாகவே இருப்பதால், ரசிகர்களும் அவரது விமர்சனத்தை ஆவலாகவே எதிர்பார்க்கின்றனர்.

அந்தவகையில், சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்தைப் பற்றிய தனது விமர்சனத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் உமர்.

மாஸ் மிரட்டல்:

அதில், "சென்சாரில் படம் பார்த்து முடித்து விட்டேன். என்ன ஒரு பயங்கர மிரட்டலான மாஸ் பொழுதுபோக்கு படம். விஸ்வாசம் படத்தின் முதல்பாதி சூப்பராகவும், நல்ல பொழுதுபோக்கு அம்சங்களுடனும் நிறைந்துள்ளது. அஜித் மிரட்டலாக நடித்துள்ளார். ரசிகர்களை இதயத்தை திருடுகிறார்" என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

பொங்கல் ரிலீஸ்:

விஸ்வாசம் படம் பொங்கலை ஒட்டி நாளை ரிலீசாக இருக்கிறது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன் நடித்துள்ளார். முன்னதாக வெளியான பாடல்கள், டீசர் அனைத்துமே டிரண்டிங்கில் சாதனை படைத்தன.

விஸ்வாசம் திருவிழா:

விஸ்வாசம் திருவிழா:

ஏற்கனவே விஸ்வாசம் ரிலீசை திருவிழாவாகக் கொண்டாட அஜித் ரசிகர்கள் எப்போதோ தயாராகத் தொடங்கி விட்டனர். பல்வேறு இடங்களில் அஜித்திற்கு மிகப் பிரமாண்டமான கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன.

ரசிகர்கள் குஷி:

ரசிகர்கள் குஷி:

இந்நிலையில் உமரின் இந்த விமர்சனம் அஜித் ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தியுள்ளது. விஸ்வாசத்தைப் பார்க்கும் ஆவல் மேலும் அதிகரித்துள்ளதாக அவர்கள் டிவிட்டரில் பதிவு வெளியிட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X