சென்சாருக்கு போன மாதிரியே திரும்பி வந்த விஸ்வாசம் #ViswasamCensoredU

By Siva

Recommended Video

விஸ்வாசம் படத்திற்கு யு சான்றிதழ் | பிங்க படத்தில் நடிச்சே ஆகணுமா?- வீடியோ

சென்னை: விஸ்வாசம் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது சென்சார் போர்டு.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் படம் சென்சார் போர்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

படத்தை பார்த்தவர்கள் எந்த இடத்திலும் கத்தரி போடவில்லை.

விஸ்வாசம்

விஸ்வாசம் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது சென்சார் போர்டு. அதாவது குடும்பத்துடன் பார்க்க உகந்த படம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொங்கல் தல பொங்கல் என்பதை சத்யஜோதி பிலிம்ஸ் உறுதி செய்துள்ளது.

பேட்ட

பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாகும் ரஜினியின் பேட்ட படத்திற்கு யு/ஏ சான்று கிடைத்ததை மாஸ் புகைப்படத்துடன் தெரிவித்தது சன் பிக்சர்ஸ். சத்யஜோதியும் தான் இருக்கே என்று அஜித் ரசிகர்கள் அலுத்துக் கொள்கிறார்கள்.

ரஜினி

விஸ்வாசம் டீஸரை எப்பத்தான்யா வெளியிடுவீர்கள் என்று அஜித் ரசிகர்களும் கெஞ்சியும், கொஞ்சியும், திட்டியும் பார்த்தும் ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் ரஜினி தனது சட்டையை மடித்துவிட்டால் கூட புகைப்படம் வெளியிடுகிறது சன் பிக்சர்ஸ். இது தான் தயாரிப்பாளருக்கு அழகு என்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.

அஜித்

அஜித்

புத்தாண்டு அன்று விஸ்வாசம் படத்தின் டீஸர் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஆணியே புடுங்க வேண்டாம் என்று திட்டுகிறார்கள் அஜித் ரசிகர்கள். பேட்ட குறித்து சன் பிக்சர்ஸ் தினமும் ஏதாவது ட்வீட் செய்வதை பார்த்து சத்யஜோதி பிலிம்ஸை கழுவிக் கழுவி ஊத்துகிறார்கள் தல ரசிகாஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X