வீட்டில் கால் மேல் கால் போட்டுக் கொண்டே 'விஸ்வாசம்' பார்க்கலாம்: அது எப்படி?
Recommended Video

தல ரசிகர்கள் வைத்த கோரிக்கைகள் வீணாகிவிட்டது.
சென்னை: விஸ்வாசம் படம் அமேசான் பிரைமில் வெளியிடப்பட்டுள்ளது.
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த விஸ்வாசம் படம் கடந்த மாதம் 10ம் ரிலீஸானது. படம் இன்னும் பல தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அஜித்தின் கெரியரில் பெரிய வெற்றி பெற்ற படங்கள் பட்டியலில் விஸ்வாசம் சேர்ந்துள்ளது. இந்நிலையில் அந்த படத்தின் டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் உரிமையை வாங்கிய அமேசான் பிரைம் அதை வெளியிட்டுள்ளது.
படத்தை வெளியிடும் முன்பு அமேசான் பிரைம் கவிதை சொல்ல முயன்றிருக்கிறது. மேலும் எங்களுக்கும் அஜித்தை பிடிக்கும் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
விஸ்வாசம் படத்தை ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியிடுமாறு தல ரசிகர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications