ஓரமாப் போய் விளையாடுங்கப்பா: தீபாவளிக்கு விஸ்வாசம் வருதாம்
சென்னை: விஸ்வாசம் படம் தீபாவளிக்கே ரிலீஸாகக்கூடும் என்று கூறப்படுகிறது.
இயக்குனர் சிவா, அஜித் நான்காவது முறையாக சேர்ந்து பணியாற்றும் விஸ்வாசம் படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு இந்தா அந்தா என்று இழுத்துக் கொண்டே போய் ஒரு வழியாக இந்த மாதம் தான் துவங்கியது. இதனால் படம் தீபாவளிக்கு வராது என்று செய்திகள் வெளியாகின.
படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

சென்னை
ஹைதராபாத், சென்னை, மும்பை ஆகிய மூன்று இடங்களில் மூன்று கட்டத்தில் படப்பிடிப்பை நடத்தி முடிக்கிறாராம் சிவா. ஹைதராபாத்தில் நடக்கும் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடையப் போகிறதாம்.

மும்பை
ஹைதராபாத்தை அடுத்து சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும், மும்பையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பும் நடைபெறுகிறதாம். முன்னதாக இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடக்கும் என்று கூறப்பட்டது.

தீபாவளி
விஸ்வாசம் படத்தை முன்பு தெரிவித்தது போன்றே தீபாவளிக்கே ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளாராம் சிவா. தீயாக வேலை செய்து இந்த தீபாவளியை தல தீபாவளியாக்கப் போகிறாராம் சிவா.

மகிழ்ச்சி
இந்த தீபாவளிக்கு தல படம் ரிலீஸாகாது என்று கவலையில் இருந்த ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சியை அளித்துள்ளது. அப்புறம் என்ன, இந்த தீபாவளி தல தீபாவளி தான்.

சிவா
விவேகம் படத்தை அஜித் ரசிகர்களாலேயே கடுப்பாகாமல் பார்க்க முடியவில்லை. அதனால் விஸ்வாசத்தை கொஞ்சம் பார்த்து பண்ணுங்க சிவா என்பதே தல ரசிகர்களின் வேண்டுகோள்.


Click it and Unblock the Notifications











