கோட்டை விட்ட புள்ளிங்கோ.. வெச்சு செய்த விஸ்வாசிகள்.. டிரெண்டிங்கில் அடிச்சுத் தூக்கிய ’தல’!

Recommended Video

2019-ம் ஆண்டின் செல்வாக்கு மிகுந்த ஹேஷ்டேக் விஸ்வாசம் !

சென்னை: இந்தியளவில் இந்த ஆண்டு அதிக செல்வாக்கு மிக்க ஹேஷ்டேகாக அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தின் ஹேஷ்டேக் முதலிடத்தை பிடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

அஜித் மற்றும் விஜய் ரசிகர்களிடையே தொடர்ந்து வந்த ட்விட்டர் போரில் விஜய் ரசிகர்களை அஜித் ரசிகர்கள் பீட் செய்துள்ளனர்.

விஜய்யின் தளபதி 63, பிகில், தளபதி 64 போன்ற எந்தவொரு ஹேஷ்டேகும் இந்த பட்டியலில் டாப் 5 லிஸ்ட்டில் கூட வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நம்பர் 1

2019ம் ஆண்டின் செல்வாக்கு மிகுந்த ஹேஷ்டேக்காக பொங்கலுக்கு வெளியான அஜித்தின் விஸ்வாசம் ஹேஷ்டேக் மாறியுள்ளது. அதற்கடுத்து இரண்டாம் இடத்தில் தான், லோக் சபா தேர்தல் 2019 ஹேஷ்டேகே இடம்பிடித்துள்ளது. இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் #CWC19 ஹேஷ்டேகும், 4ம் இடத்தில் மகேஷ்பாபுவின் மஹரிஷியும் 5ம் இடத்தில் ஹேப்பி தீபாவளி ஹேஷ்டேகும் இடம்பிடித்துள்ளன.

லான்ச் 2020

லான்ச் 2020

2020ம் ஆண்டுக்கான லான்ச் 2020 நிகழ்ச்சி அண்மையில் நடந்துள்ளது. இதில், பல தொழில்களை சார்ந்த தொழில் அதிபர்கள் ஒன்று கூடி, ட்விட்டரில் தங்கள் தொழிலை எப்படி பிராண்டிங் செய்யலாம் என்ற ஆலோசனை கூட்டத்தில் தான் விஸ்வாசம் ஹேஷ்டேக் இந்தியளவில் நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளது என்பதை ட்விட்டர் இந்தியா அறிவித்தது.

கெத்து காட்டும் ’தல’ ரசிகர்கள்

இந்த செய்தியை சத்ய ஜோதி நிறுவனம் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. விஸ்வாசம் ஹேஷ்டேக் இந்த ஆண்டின் செல்வாக்கு மிக்க ஹேஷ்டேக் என்ற செய்தியை கேள்வி பட்ட அஜித் ரசிகர்கள் மீண்டும் ட்விட்டரில் மாஸ் காட்டி வருகிறார்கள். விஸ்வாசம் மற்றும் வலிமை ஹேஷ்டேகுகளை டிரெண்ட் செய்து அசத்தினர்.

கோட்டை விட்ட புள்ளிங்கோ

கோட்டை விட்ட புள்ளிங்கோ

அஜித் ரசிகர்களுக்கு இணையாக எப்போதுமே ட்விட்டரில் போட்டியிட்டு வந்த விஜய் ரசிகர்கள், ஏன் இந்த ஆண்டின் செல்வாக்கு மிக்க ஹேஷ்டேகாக விஜய்யின் பிகில் ஹேஷ்டேகை கொண்டு வரவில்லை என்று தான் தெரியவில்லை. விஸ்வாசம் ஹேஷ்டேகுக்கு அடுத்த இடமில்லை மகேஷ் பாபுவின் மகரிஷி ஹேஷ்டேகை கூட வீழ்த்த முடியாமல் இந்த பட்டியலிலும் இடம்பெறாமல் கோட்டை விட்டு விட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X