எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க.. கண்ணான கண்ணே வடிவேலு வெர்ஷன்.. இது வேறமாறி எடிட்!

சென்னை: அஜித்தின் விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற “கண்ணான கண்ணே” பாடலுக்கு நடிகர் வடிவேலுவின் வெர்ஷன் என எடிட் செய்யப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

எந்தவொரு பிரச்சனைக்கும் வடிவேலு படக் காட்சிகள் வீடியோ மீம்களாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், முழு பாடலுக்கும் வீடியோ கிடைத்திருப்பதும், அந்த அளவுக்கு யோசித்து ரசிகர் ஒருவர் எடிட் செய்யப்பட்டு இருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

Viswasam Kannaana Kanne Vadivelu version edit trending in social media

காணாமல் போன மாமன்னன்: ரெட் கார்டு போடப்பட்ட நிலையில் சினிமாவில் நடிக்காமல் சில காலம் வடிவேலு காணாமல் போயிருந்தார். ஆனால், அதன் பின்னர் அனைத்து பிரச்சனைகளும் சரி செய்யப்பட்டு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு வெளியான மாமன்னன் திரைப்படம் வடிவேலுவுக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. ஆனால், அதன் பின்னர் வெளியான சந்திரமுகி 2 திரைப்படம் ஹிட் அடிக்காத நிலையில், அடுத்து வடிவேலு என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை.

கண்ணான கண்ணே வடிவேலு வெர்ஷன்: இசையமைப்பாளர் டி. இமான் இசையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அனிகா சுரேந்திரன் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடல் டி. இமானுக்கு தேசிய விருதையே வாங்கி கொடுத்தது. இந்நிலையில், அந்த பாடலுக்கு வடிவேலு வெர்ஷன் வீடியோ ஒன்றை ரசிகர்கள் எடிட் செய்து டிரெண்டாக்கி வருகின்றனர்.

பக்காவா சிங்க் ஆகுதே: வடிவேலுவின் காமெடி காட்சிகள் ஒன்றொன்றும் அந்த பாடல் வரிகளுக்கு ஏற்ப பக்காவாக சிங்க் செய்யப்பட்டு எடிட் செய்யப்பட்ட வீடியோ ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இதே போல வடிவேலுவை வைத்து பல ஹிட் பாடல்களையும் எடிட் செய்து போடுங்க பாஸ் சினிமாவில் காமெடி படங்கள் என சமீப காலமாக டார்ச்சர் செய்றாங்க சிரிக்கவே முடியல என ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

வடிவேலுவுக்கே கஷ்டம்: மற்ற நடிகர்களை விடுங்கள், வடிவேலுவுக்கே இதே போல மீண்டும் தனது பழைய படங்களை போல நகைச்சுவை காட்சிகளை ரீக்ரியேட் செய்வது என்றால் கஷ்டம் தான் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X