100 மில்லியனை கடந்த ’கண்ணான கண்ணே’ பாடல்.. ட்விட்டரை தெறிக்கவிடும் அஜித் ரசிகர்கள்!

சென்னை: இந்த ஆண்டின் சிறந்த மெலோடியாகவும், குழந்தைகளுக்கான தாலாட்டு பாடலாகவும் இருக்கும் விஸ்வாசம் படத்தின் 'கண்ணான கண்ணே' பாடலின் லிரிக் வீடியோ 100 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது.

விஸ்வாசம் படத்தின் இசையமைப்பாளர் இமான், 100 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ள நிலையில், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தல அஜித் ரசிகர்கள், ட்விட்டரில் #100MLoveForKannaanaKanney என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

சிவாவின் விஸ்வாசம்

சிவாவின் விஸ்வாசம்

வீரம், வேதாளம், விவேகம் என தொடர்ந்து அஜித்தை வைத்து சிறுத்தை சிவா படங்களை இயக்கி வந்தார். இதில், விவேகம் படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றியை பதிவு செய்யவில்லை. ஆனாலும், அவரை நம்பி நடிகர் அஜித் மீண்டும் ஒரு படத்தை கொடுத்தார். அதற்கு விஸ்வாசமாக பிளாக்பஸ்டர் விஸ்வாசம் படத்தை இயக்குநர் சிவா கொடுத்துள்ளார். அடுத்ததாக சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பும் சிவாவுக்கு கிடைத்துள்ளது.

பாக்ஸ் ஆஃபிஸ்

பாக்ஸ் ஆஃபிஸ்

2019ம் ஆண்டு வெளியான தமிழ் படங்களில் ரஜினியின் பேட்ட பாக்ஸ் ஆஃபிஸை பீட் செய்து நடிகர் அஜித்தின் விஸ்வாசம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. இதுவரை வெளியான அஜித் படங்களிலேயே விஸ்வாசம் படம் தான் அதிக வசூலை ஈட்டியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கண்ணான கண்ணே

இமான் இசையில் தாமரை வரிகளில் வெளியான கண்ணான கண்ணே பாடல் இந்த ஆண்டின் சிறந்த மெலோடியாகவும் தேர்வாகியுள்ளது. தமிழ் ரசிகர்களின் இல்லங்கள் தோறும் ஒளிபரப்பாகிய இந்த பாடலின் லிரிக் வீடியோ 100 மில்லியன் வியூஸ்களை கடந்து சாதித்துள்ளது.

முதல் முறை

நடிகர் அஜித் நடிப்பில் இதுவரை வெளியான எந்த பாடல்களும் 100 மில்லியன் வியூஸ்களை கடந்தது இல்லை. முதன்முறையாக கண்ணான கண்ணே பாடல் இந்த சாதனையை புரிந்துள்ளது. இதனால், அஜித் ரசிகர்கள் #100MLoveForKannaanaKanney என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.

எமோஷனல் பாடல்

டிக் டிக் டிக் படத்தில் இடம்பெற்ற குறும்பா பாடல், தந்தை, மகனின் பாசத்தை வெளிப்படுத்தியது. அதே போல, சித் ஸ்ரீராம் குரலில் விஸ்வாசம் படத்தில் இடம்பெற்றுள்ள கண்ணான கண்ணே பாடல், தந்தை - மகள் பாசத்தை வெளிக்காட்டி இந்த ஆண்டின் சிறந்த எமோஷனல் பாடலாக மாறியுள்ளது என இந்த ரசிகர் ட்வீட் போட்டுள்ளார்.

தந்தை மகள் பாசம்

தந்தை மகள் பாசத்தை வெளிக்காட்டிய கண்ணான கண்ணே பாடல் அனைத்து அப்பாக்களுக்கும் மகளுக்கும் பிடிக்கும் என இந்த ரசிகர் ட்வீட் போட்டுள்ளார்.

தந்தையர்களின் தாய் பாசம்

விஸ்வாசம் படத்தில் இடம்பெற்றுள்ள கண்ணான கண்ணே பாடல் துவக்கத்தில் நடிகர் அஜித், மழையில் நனைந்தபடி தனது கண்ணீரை மறைப்பார். ஒவ்வொரு தந்தையர்களின் தாய் பாசம் என இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.

வெறி காம்போ

சித் ஸ்ரீராம், இமான், தல அஜித் என வெறி காம்போ இணைந்துள்ள இந்த பாடல் இந்த ஆண்டின் சிறந்த பாடல் என இந்த தல ரசிகர் ட்வீட் போட்டுள்ளார்.

இமான் நன்றி

கண்ணான கண்ணே பாடலை யூடியூபில் 100 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இந்த பாடலை சிறந்த பாடலாக மாற்றிய ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர் இமான்.

இந்த உற்சாகம் போதும்

'மயில் ஒன்றை பார்க்கிறேன், மழையாகி ஆடினேன், இந்த உற்சாகம் போதும், சாகத் தோன்றும் இதே விநாடி' என கண்ணான கண்ணே பாடலில் இடம்பெற்ற வரிகளை பகிர்ந்து தல ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X