விஸ்வாசம் படத்தை பார்த்ததும் உங்களுக்கும் இது தான் தோனுச்சா? #Viswasam
Recommended Video

சென்னை: விஸ்வாசம் படத்தை பார்ப்பவர்களுக்குள் ஒரு கேள்வி எழுகிறது.
அஜித்தின் விஸ்வாசம் படம் ரஜினிகாந்தின் பேட்ட படத்துடன் சேர்ந்து கடந்த 10ம் தேதி ரிலீஸானது. ரஜினி படம் வெளியானாலும் வசூல் படுத்துவிடாது என்பதை விஸ்வாசம் நிரூபித்துள்ளது.
விஸ்வாசம் குடும்பங்களை மனதில் வைத்து எடுக்கப்பட்ட படமாகும்.
குட்டீஸ்
விஸ்வாசம் படம் ஓடும் தியேட்டர்களில் குடும்பம், குடும்பமாக மக்கள் அமர்ந்திருப்பதை காண முடிகிறது. திரையில் அஜித் ஆடுவதை பார்த்துவிட்டு குட்டீஸ்களும், இளம் பெண்களும் கூட தியேட்டரில் ஆட்டம் போட்டுள்ளனர்.

பாசம்
அஜித், மகள் இடையேயான பாசக் காட்சிகளை பார்த்து அழாதவர்களே இல்லை. யாரும் பார்க்கும் முன்பு கண்ணீரை துடைத்துவிட்டு சமாளித்தவர்கள் பலர். படத்தை பார்க்கும் அனைவருக்கும் எழும் கேள்வி ஒன்று தான். நான் மட்டும் தான் அழுதேனா என்பது தான் அந்த கேள்வி.
மகள்
தந்தை, மகள் இடையேயான பாசத்தை அற்புதமாக திரையில் காட்டி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் அழ வைத்துவிட்டார் இயக்குனர் சிவா. இது தான் படத்திற்கு உண்மையான வெற்றி.
மகிழ்ச்சி
மாற்றுத் திறனாளி பெண் தியேட்டருக்கு சென்று விஸ்வாசம் பார்த்ததை பார்த்து தல ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர். இது போதும் அவர்களுக்கு.


Click it and Unblock the Notifications











