கர்நாடகாவிலும் தலயின் சாம்ராஜ்யம்.. டிஆர்பியில் சாதனை படைத்த விஸ்வாசம் !

சென்னை : தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும் போதெல்லாம் டிஆர்பி யில் மாஸ் காட்டி வந்த விஸ்வாசம் திரைப்படம் தற்போது கன்னட தொலைக்காட்சிகளிலும் அதிக மக்களால் பார்க்கப்பட்டு முதலிடத்தில் உள்ளது.

Recommended Video

Shocking! Why Ajith avoids crowd | Alisha Abdullah

தல அஜித் நடிப்பில் குடும்பங்கள் கொண்டாடும் மாஸ் திரைப்படமான விஸ்வாசம் சென்ற ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி வசூல் வேட்டை புரிந்தது.

இந்த திரைப்படம் தமிழ் தொலைக்காட்சிகளில் எப்போதெல்லாம் ஒளிபரப்பப்படுகிறதோ, அப்போதெல்லாம் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு தமிழ் தொலைக்காட்சி டிஆர்பியை அடித்து நொறுக்கி வந்தது.

நான்காவது முறையாக

நான்காவது முறையாக

தல அஜித் மற்றும் சிறுத்தை சிவா தொடர் கூட்டணியில் நான்காவது முறையாக இணைந்த திரைப்படம் விஸ்வாசம். 2019ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான இந்த திரைப்படம் திரையரங்குகளில் பல நாட்கள் ஓடி சக்கைபோடு போட்டு வசூல் சாதனை புரிந்தது.

கலர்ஃபுல்லாக வெளியான கதை

கலர்ஃபுல்லாக வெளியான கதை

தந்தை மகள் பாசத்தை மையமாகக் கொண்டு உருவான விஸ்வாசம் திரைப்படம், பல்வேறு மாஸ் காட்சிகள் மற்றும் அனைவரும் ரசிக்கும் படி காதல், பாசம், சண்டை, காமெடி என கலர்ஃபுல்லாக என பல காட்சிகளுடன் வெளியாகி ஹிட்டானது.

மனதை உருக்கும் சென்டிமென்ட்

மனதை உருக்கும் சென்டிமென்ட்

இளம் வயது தூக்குதுரை கதாபாத்திரத்தில் அடிதடி சண்டை, கேலி கிண்டல் என ஆரவாரமாக இந்தப் படத்தின் முதல் பாதி அனைவரையும் சிரிக்கவும் குத்தாட்டம் போடவும் வைத்த நிலையில், இதன் இரண்டாம் பாதி தந்தை மகள் பாசத்தை மிக அற்புதமாக வெளிப்படுத்தி மனதை உருக்கும் பல சென்டிமென்ட் காட்சிகள் இடம்பெற்று பார்க்கும் அனைவரையும் உருக வைத்தது.

ஜாகமல்லா

ஜாகமல்லா

தல அஜித் மற்றும் நயன்தாரா கலக்கல் காம்போவில் தமிழில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் பல்வேறு மொழி ரசிகர்களையும் கவர்ந்து வந்த நிலையில், இத்திரைப்படம் கன்னட மொழியில் "ஜாகமல்லா" என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

இரண்டாவது முறையாக

இரண்டாவது முறையாக

இவ்வாறு கன்னட மொழியில் மாற்றம் செய்யப்பட்ட "ஜாகமல்லா" திரைப்படம் சமீபத்தில் கர்நாடகாவில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்டது, ஏற்கனவே ஜாகமல்லா திரைப்படம் ஒருமுறை ஒளிபரப்பப்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாவது முறையாக தற்போது ஒளிபரப்பப்பட்டது.

குடும்பம் குடும்பமாக

குடும்பம் குடும்பமாக

ஜாகமல்லா திரைப்படம் ஒளிபரப்பப்படுவது இது இரண்டாவது முறை என்றாலும் மிக அதிக அளவிலான ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக அதைப் பார்த்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் கன்னட தொலைக்காட்சி டிஆர்பியை வெளியிடும் BARC, தற்போது அதை பற்றிய கன்னட தொலைக்காட்சிகளின் டிஆர்பி விபரங்களை வெளியிட்டது. அவ்வாறு வெளியிடப்பட்ட BARC விபரங்களின் படி "ஜாகமல்லா" திரைப்படத்தை 58 லட்சத்து 97 ஆயிரம் ரசிகர்கள் பார்த்து ரசித்து இருக்கிறார்கள்.

 ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

இந்த வருடத்தின் 29 ஆவது வாரத்தில் கன்னட தொலைக்காட்சி டிஆர்பி யில் ஜாகமல்லா திரைப்படத்தை ஒளிபரப்பிய உதயா டிவி தான் தற்போது முதலிடத்தில் உள்ளது. இதைக் கேள்விப்பட்ட உலகெங்கிலுமுள்ள தல அஜித்தின் தீவிர ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X