சர்கார் வசூலை முறியடித்துவிட்டது விஸ்வாசம்: தியேட்டர் உரிமையாளர் ட்வீட் #Viswasam
ஹைதராபாத்: சர்கார் பட வசூலை விஸ்வாசம் முறியடித்துவிட்டதாக எஸ்.ஜே. சினிமாஸ் தியேட்டர் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த விஸ்வாசம் படம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸானது. விஸ்வாசம் ஒரேயொரு மொழியில் வெளியான போதிலும் இந்தியாவில் மட்டும் ரூ. 100 கோடி(net) வசூல் செய்துள்ளது.

மலேசிய பாக்ஸ் ஆபீஸில் விஸ்வாசம் தான் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் ஆந்திராவில் இருக்கும் எஸ்.ஜே. சினிமாஸ் தியேட்டர் உரிமையாளர் வருண் விஸ்வாசம் வசூல் கூறித்து ட்வீட் செய்துள்ளார்.
அவர் தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது,
என் தியேட்டரில் சர்கார் பட வசூலை விஸ்வாசம் முந்திவிட்டது. அது விரைவில் 2.0 வசூலையும் முந்தும் போன்று. உண்மையான பிளாக்பஸ்டர் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











