Viswasam Box Office Collection: ரூ. 200 கோடி வசூலை நெருங்கும் விஸ்வாசம்
Recommended Video

சென்னை: அஜித்தின் விஸ்வாசம் படம் ரூ. 200 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடித்த விஸ்வாசம் படம் பொங்கல் ஸ்பெஷலாக கடந்த 10ம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த படத்திற்கு அஜித் ரசிகர்கள் மட்டும் அல்ல குடும்ப ஆடியன்ஸின் அமோக ஆதரவும் கிடைத்துள்ளது.

ரூ. 200 கோடி
விஸ்வாசம் படம் நேற்று வரை உலக அளவில் ரூ. 180 கோடி வசூல் செய்துள்ளது. இந்த படம் விரைவில் ரூ. 200 கோடியை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் மட்டும் அல்லாமல் வெளிநாடுகளிலும் நல்ல வசூல் செய்து கொண்டிருக்கிறது.

பேட்ட
விஸ்வாசம் ஒரேயொரு மொழியில் வெளியாகி ரூ. 180 கோடி வசூல் செய்துள்ளது பெரிய விஷயம். அதுவும் ரஜினிகாந்தின் பேட்ட படத்துடன் வெளியாகியும் விஸ்வாசம் படத்தின் வசூல் கொஞ்சமும் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கோடிகள்
விஸ்வாசம் படம் 4வது வாரத்திலும் நன்றாக வசூல் செய்து வருகிறது. தமிழகத்தில் தினமும் கோடிகளில் வசூலித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பி அன்ட் சி சென்டர்களில் விஸ்வாசம் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.

சிவா
சிவா தன்னை விட்டு செல்லும்போது வெற்றிகரமான படத்துடன் செல்ல வேண்டும் என்று விரும்பி விஸ்வாசம் படத்தில் நடித்தார் அஜித். அவர் நினைத்தது போன்றே விஸ்வாசம் வெற்றிப் படமாக அமைந்துவிட்டது.


Click it and Unblock the Notifications











