10ம் தேதி வர்றோம், அடிச்சி தூக்குறோம்: #Viswasam ரிலீஸ் தேதி உறுதி
சென்னை: விஸ்வாசம் படம் வரும் 10ம் தேதி ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பேட்ட படம் ஜனவரி 10ம் தேதி ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். ஆனால் விஸ்வாசம் பொங்கல் ரிலீஸ் என்று கூறிவிட்டு தேதியை அறிவிக்காமல் இருந்தார்கள்.

படம் 10ம் தேதி ரிலீஸாகுமா இல்லையா என்ற குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் விஸ்வாசம் படம் 10ம் தேதி தான் ரிலீஸாகிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்ட பிறகே அஜித் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இன்று காலை முதல் இந்த தேதி குழப்பத்தில் இருந்தவர்களுக்கு தற்போது திருப்தியாக உள்ளது.
ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு ட்வீட்டில் கூறப்பட்டிருப்பதாவது.
ட்ரெய்லருக்கே இன்டர்நெட்டை தெறிக்க விட்டோம், அப்போ படத்துக்கு? எதுக்கு வெயிட் பண்ணனும்... சீக்கிரமே வர்றோம்! விஸ்வாசம் உலகம் முழுவதும் ஜனவரி 10ம் தேதி ரிலீஸாகிறது. தியேட்டர் லிஸ்ட் விரைவில்... அடிச்சி தூக்க தயாரா என்று கேட்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











