ரஷ்யா, உக்ரைனில் ரிலீஸாகும் விஸ்வாசம்: புதிய சாதனை
சென்னை: விஸ்வாசம் படம் ரஷ்யா மற்றும் உக்ரைனில் வெளியாக உள்ளது.
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இந்த படம் ரஷ்யா மற்றும் உக்ரைனில் வெளியாக உள்ளது.
அதுவும் ரஷ்யாவில் 8க்கும் மேற்பட்ட நகரங்களில் வெளியிடப்பட உள்ளது.

சாதனை
ரஷ்யாவில் 8க்கும் மேற்பட்ட நகரங்களில் வெளியாகும் முதல் தமிழ் படம் விஸ்வாசம் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் 2.0 படத்தை ரஷ்யாவில் வெளியிட்ட செவன்த் சென்ஸ் சினிமா தான் விஸ்வாசம் படத்தை அங்கு வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விஸ்வாசத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் தமிழகத்தில் வெளியிடுகிறது.

ரசிகர்கள்
விஸ்வாசம் படத்தின் ட்ரெய்லர் புத்தாண்டு அன்று வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் சிவா மற்றும் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் மீது மரண கடுப்பில் உள்ளனர்.

சத்யஜோதி பிலிம்ஸ்
விஸ்வாசம் படத்தோடு சிவா மற்றும் சத்யஜோதி பிலிம்ஸுடனான உறவை துண்டித்துவிடுமாறு ரசிகர்கள் அஜித்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். விஸ்வாசம் அப்டேட் கேட்டு கெஞ்சிக் கெஞ்சி டயர்டாகிவிட்டனர். ஒரு அப்டேட் கூட கொடுக்க முடியாதவர்களுடன் வேலை செய்ய வேண்டாம் தல என்கிறார்கள் ரசிகர்கள்.

வினோத்
விஸ்வாசம் படத்தை அடுத்து அஜித் ஹெச். வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார். அந்த படம் குறித்து ஏற்கனவே நிறைய அப்டேட்டுகள் வரத் துவங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











