viswasam - அசைக்க முடியாத 6வது வாரம்.. வசூலில் தெறிக்க விடும் ‘விஸ்வாசம்’!
விஸ்வாசம் படம் 6வது வாரமாக வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடி வருகிறது.
Recommended Video

சென்னை : இடையில் பல படங்கள் ரிலீசான போதும், தொடர்ந்து 6 வாரங்களாக பல தியேட்டர்களில் இன்னும் விஸ்வாசம் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள நான்காவது படம் விஸ்வாசம். இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். குடும்பப் பாசத்தை ஆக்சன், காதல் கலந்து சொல்லும் இப்படத்திற்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ரஜினியின் பேட்ட படத்துடன் பொங்கலையொட்டி ரிலீசான இப்படம் தொடர்ந்து ஆறாவது வாரமாக பல தியேட்டர்களில் ஓடி வருகிறது. இடையில் தில்லுக்கு துட்டு 2, தேவ், ஒரு அடார் லவ் உள்ளிட்ட முக்கிய படங்கள் ரிலீசாகின.
ஆனபோதும், தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் விஸ்வாசம் படம் ஓடி வருகிறது. மக்களிடையே இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால், பல தியேட்டர்களில் காலை அல்லது மாலைக் காட்சியாக விஸ்வாசத்தை திரையிட்டு வருகின்றனர்.
இதனை அப்படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.
குடும்பம் குடும்பமாக மக்கள் பார்த்து வருவதால், புதிய வசூல் சாதனை புரிந்து வருகிறது விஸ்வாசம். இதனால், அஜித், சிவா கூட்டணியில் வந்த படங்களில் இந்தப் படம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதோடு, அஜித்தின் படங்களில் அதிக வசூல் கொடுத்த படம் என்ற சிறப்பையும் விஸ்வாசம் பெற்றுள்ளது.
அஜித்தின் விஸ்வாசம் படம் தான் 2019ம் ஆண்டின் முதல் வெற்றி படம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











