போட்ரா வெடிய: நாளை வெளியாகிறது விஸ்வாசம் செகண்ட் லுக் #Viswasam #ViswasamThiruvizha
சென்னை: விஸ்வாசம் படத்தின் செகண்ட் லுக் நாளை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, விவேக், கோவை சரளா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் விஸ்வாசம். படம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி அப்டேட் கொடுப்பது இல்லை என்ற வருத்தம் அஜித் ரசிகர்களுக்கு.
இந்நிலையில் அஜித்தின் மேனேஜரான சுரேஷ் சந்திரா விஸ்வாசம் அப்டேட் கொடுத்துள்ளார்.
அப்டேட்
விஸ்வாசம் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை சத்யஜோதி பிலிம்ஸ் நாளை காலை 10.30 மணிக்கு வெளியிடுகிறது என்று சுரேஷ் சந்திரா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். #Viswasam #ViswasamThiruvizha
ரசிகர்கள்
ஏதாவது அப்டேட் கிடைக்காதா என்று எதிர்பார்த்து தினமும் சத்யஜோதி பிலிம்ஸின் ட்விட்டர் பக்கம் சென்று ஏமாற்றம் அடைந்த அஜித் ரசிகர்களுக்கு சுரேஷ் சந்திராவின் ட்வீட் மகிழ்ச்சி அளித்துள்ளது. நல்ல வேளை நள்ளிரவில் போஸ்டரை வெளியிடவில்லை.
விஸ்வாசம் திருவிழா
சுரேஷ் சந்திராவின் ட்வீட்டை பார்த்த அஜித் ரசிகர்கள் தற்போதே விஸ்வாசம் திருவிழாவை கொண்டாடத் துவங்கிவிட்டனர். நாளை செகண்ட் லுக் வெளியான கையோடு போஸ்டர் அடித்து ஊரெல்லாம் ஒட்டிவிடுவார்கள்.
சிறப்பு
கடந்த முறை அப்டேட் என்று கூறிவிட்டு விஸ்வாசம் படத்தின் தமிழக தியேட்டர் ரிலீஸ் உரிமையை வாங்கியது யார் என்று கூறி மொக்கை போட்டு ரசிகர்களை அப்செட் செய்தார்கள். இந்நிலையில் தான் நாளை செகண்ட் லுக் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











