இந்திய பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைத்த விஸ்வாசம் #Viswasam
சென்னை: விஸ்வாசம் படம் தொடர்ந்து வசூலில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது.
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளியான விஸ்வாசம் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
குடும்ப ஆடியன்ஸின் ஆதரவால் வசூல் அமோகமாக உள்ளது.

ரூ. 100 கோடி
இந்த ஆண்டு ஒரேயொரு மொழியில் மட்டும் வெளியாகி இந்தியாவில் மட்டும் ரூ. 100 கோடி(Net) வசூல் செய்த முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது விஸ்வாசம் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்
மலேசியாவில் உள்ள ஜி.எஸ்.சி. மல்டிபிளக்ஸ் செயினில் விஸ்வாசம் தொடர்ந்து இரண்டாவது வாரமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. விஸ்வாசத்திற்கு அடுத்த இடத்தில் ரஜினிகாந்தின் பேட்ட படம் உள்ளது.

முதலிடம்
மலேசியாவில் உள்ள பாப்கார்ன் பட ஆப்பில் விஸ்வாசம் முதலிடத்திலும், பேட்ட இரண்டாவது இடத்திலும் உள்ளன. அதற்கு அடுத்தடுத்த இடங்களை ஹாலிவுட் படங்கள் பிடித்துள்ளன.

வசூல்
ஒரே நேரத்தில் இரண்டு பெரிய படங்கள் ரிலீஸான போதிலும் வசூல் பாதிக்கப்படவில்லை. இரண்டு படங்களுமே தொடர்ந்து நல்ல வசூல் செய்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் பேட்ட படத்தை விட விஸ்வாசம் அதிகம் வசூல் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











