அமேசானிலும் சாதனை படைத்த விஸ்வாசம்: தல போல வருமா!
Recommended Video

சென்னை: விஸ்வாசம் படம் அமேசான் பிரைமிலும் சாதனை படைத்துள்ளது.
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த விஸ்வாசம் படம் கடந்த மாதம் 10ம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது. விஸ்வாசம் இன்னும் பல தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அதன் டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் உரிமையை வாங்கிய அமேசான் பிரைம் அதை வெளியிட்டது. படம் வெளியான அன்றே அமேசான் பிரைமில் அதை பலர் பார்த்து ரசித்துள்ளனர்.
அமேசான் பிரைமில் வெளியிடப்பட்ட முதல் நாளே அதிகம் பார்க்கப்பட்ட தென்னிந்திய படம் என்ற பெருமையை பெற்றுள்ளது விஸ்வாசம். விஸ்வாசம் படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டுள்ளது. அது வரும் மார்ச் மாதம் 1ம் தேதி ரிலீஸாக உள்ளது.
விஸ்வாசம் படத்தை ரிலீஸானபோதே பார்த்தாலும் அதை மீண்டும் மீண்டும் பார்த்து பலரும் ரசித்துக் கொண்டிருப்பது தான் அதன் வெற்றிக்கு காரணம்.


Click it and Unblock the Notifications











