இது தான் தல மாஸ், மெரட்டுறீங்க, தல தெறிக்கவிட்டுடுச்சி: பிரபலங்கள் பெருமிதம் #ViswasamTrailer
சென்னை: விஸ்வாசம் ட்ரெய்லரை பார்த்துவிட்டு கோலிவுட் பிரபலங்கள் பாராட்டி ட்வீட் செய்து வருகிறார்கள்.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. ட்ரெய்லர் கொல மாஸாக உள்ளது என்கிறார்கள் ரசிகர்கள்.
பிரபலங்களுக்கும் ட்ரெய்லர் மிகவும் பிடித்துள்ளது.
சிவகார்த்திகேயன்
இது தான் தல மாஸ். அஜித் சார் படங்களில் வீரம் தான் எனக்கு பிடித்த படம். இந்த பொங்கலுக்கு பிறகு அது விஸ்வாசம் என்று ட்வீட் செய்துள்ளார் சிவகார்த்திகேயன்.
கிருஷ்ணா
#VisawasamTrailer தல தெறிக்கவிட்டுடுச்சி திருவிழா மோடு ஆரம்பம். தல ரசிகர்களுடன் சேர்ந்து படத்தை பார்க்க ஆவலாக உள்ளது. தல போல வருமா என்கிறார் நடிகர் கிருஷ்ணா.
பாண்டிராஜ்
#VisawasamTrailer 🔥🔥🔥
மெரட்டு மெரட்டுனு மெரட்டுறீங்க என்று தெரிவித்துள்ளார் இயக்குனர் பாண்டிராஜ்.
ஜெ. அன்பழகன்
விஸ்வாசம் ட்ரெய்லர் அட்டகாசமாக உள்ளது என்று திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் ட்வீட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











