அலறும் யூடியூப்: பேட்ட ட்ரெய்லர் சாதனையை அசால்டா முறியடித்த விஸ்வாசம் #ViswasamTrailer
சென்னை: விஸ்வாசம் ட்ரெய்லர் வெளியான 12 நிமிடத்தில் அதை யூடியூப்பில் 10 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, தம்பி ராமயைா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் ட்ரெய்லர் இன்று மதியம் 1.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
ட்ரெய்லர் வெளியான வேகத்தில் சாதனை படைத்துள்ளது.
விஸ்வாசம்
விஸ்வாசம் ட்ரெய்லர் ரிலீஸான 12 நிமிடத்தில் அதை யூடியூப்பில் 10 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இன்னும் என்னென்ன சாதனை படைக்கப் போகிறதோ?
பேட்ட
பொங்கலுக்கு வெளியாகும் ரஜினிகாந்தின் பேட்ட ட்ரெய்லர் வெளியான 40 நிமிடத்தில் அதை 10 லட்சம் பேர் பார்த்திருந்தனர். ஆனால் விஸ்வாசம் பேட்ட சாதனையை முறியடித்துள்ளது.
2 மில்லியன்
விஸ்வாசம் ட்ரெய்லரை 25 நிமிடத்தில் 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இது இதுக்காக தானே தல ரசிகர்கள் காத்திருந்தனர்.
சத்யஜோதி பிலிம்ஸ்
இத்தனை நாட்களாக அப்டேட் கொடுப்பேனா என்று அடம்பிடித்த சத்யஜோதி பிலிம்ஸ் தற்போது விஸ்வாசம் பட ட்ரெய்லரின் சாதனைகள் குறித்து தொடர்ந்து ட்வீட் செய்து கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











