Viswasam review- “ஷ்யூர் ஷாட் பிளாக்பஸ்டர்.. அஜித் நடிப்பு வேற லெவல்”.. தெறிக்க விடும் விமர்சனங்கள்!
அஜித்தின் விஸ்வாசம் படம் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் டிவிட்டரில் விமர்சித்து வருகின்றனர்.
Recommended Video

சென்னை: அஜித் நடித்த விஸ்வாசம் படம் காதல் மற்றும் குடும்ப செண்டிமெண்ட் காட்சிகளுடன் ரசிக்கும்படி இருப்பதாக டிவிட்டரில் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் இன்று ரிலீசாகியுள்ளது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஆரம்பம் முதலே படம் தொடர்பான அப்டேட்டுகளைத் திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர் அஜித் ரசிகர்கள். அப்டேட்டுகளையே கொண்டாடியவர்கள், படத்தை விட்டு விடுவார்களா?
விஸ்வாசம் முதல் காட்சியைப் பார்த்துவிட்டு, அஜித்தின் நடிப்பையும், படக்கதையையும் காட்சிக்கு காட்சி விமர்சித்து வருகிறார்கள்.
குடும்ப செண்டிமெண்ட்:
அஜித் படங்களில் நீண்ட நாட்களுக்குப் பிறகு காதல் மற்றும் குடும்ப செண்டிமெண்ட் காட்சிகள் தூக்கலாக இருப்பது விஸ்வாசத்தில் தான் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் இந்த ரசிகர்.
ஹிட்டடிக்கும்:
விஸ்வாசம் நிச்சயம் சூப்பர்ஹிட் படமாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் இவர்.
ப்ளாக்பஸ்டர் படம்:
விஸ்வாசம் படம் ப்ளாக்பஸ்டர் ஆகும். செம மாஸ். அஜித்தின் நடிப்பு வேற லெவலில் இருப்பதாக சிலாகித்துள்ளார் இந்த ரசிகர்.
தல என்ட்ரி:
முதல் பத்து நிமிடத்திலேயே படம் புல்லரிக்க வைத்து விட்டதாகக் கூறுகிறார் இந்த ரசிகர். அதிலும் குறிப்பாக அஜித் வணக்கம் கூறும் காட்சிக்கு தியேட்டரே எழுந்து நிற்கிறதாம். அஜித் நாற்காலியில் அமர்ந்த பிறகு தான், மறுபடியும் ரசிகர்கள் தியேட்டர் இருக்கைகளில் அமர்கிறார்கள் என்கிறார் இந்த ரசிகர்.


Click it and Unblock the Notifications