விஸ்வாசம்: 'கொலமாஸா ஒரு டிரைலர்... ஆன் தி வே'....படக்குழு முக்கிய அறிவிப்பு!
விஸ்வாசம் படத்தில் டிரைலர் விரைவில் வெளியாகிறது.
சென்னை : விஸ்வாசம் படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கு முக்கிய காரணம் 2018ல் அஜித் படம் எதுவும் வெளிவராதது தான்.
ஜனவரி 10ம் தேதி வெளிவர உள்ள அப்படத்தினை எதிர்பார்த்து அஜித் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ரஜினியின் பேட்ட திரைப்படமும் அன்று தான் வெளியாகிறது. ஆனால் அப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி உலகளவில் தெறிக்கவிட்டது.

இதனால் விஸ்வாசம் படத்தின் டிரைலர் மீதான எதிர்பார்ப்பு இன்னும் கூடியிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என அப்படம் எடிட்டர் ரூபன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், "கொலமாஸா ஒரு டிரைலர் ஆன் தி வே", என பதிவிட்டுள்ளார். மேலும் விஸ்வாசம் படத்தின் ஸ்கிரீன் ஷாட்டுடன் போட்டோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
டிரைலர் எப்போது வரும் என விழி மேல் விழி வைத்து காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு இது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











